பொது செய்தி

இந்தியா

கோவாக்சின் தடுப்பூசி; 3ம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றது.இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ‛கோவிஷீல்ட்' தடுப்பூசி தயாரிக்கும் பணியை புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் மேற்கொள்கிறது. அதேபோல், ஐதராபாத்தை சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், 'கோவாக்சின்'
Covaxin, 3rdPhase, Test, Success, Bharat BioTech, பாரத் பயோடெக், கோவாக்சின், 3ம் கட்டம், பரிசோதனை, நிறைவு

புதுடில்லி: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ‛கோவிஷீல்ட்' தடுப்பூசி தயாரிக்கும் பணியை புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் மேற்கொள்கிறது. அதேபோல், ஐதராபாத்தை சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளது. இந்த இரு தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அவசரகால அனுமதியளித்தது. ஆனால், கோவாக்சின் தடுப்பு மருந்தின் 3-வது கட்ட க்ளினிக்கல் பரிசோதனை நிறைவுபெறாத நிலையில், அனுமதியளிக்கப் பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.


latest tamil news


இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 3ஆம் கட்ட பரிசோதனையில் 25,800 தன்னார்வலர்கள் பங்கேற்றதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
08-ஜன-202111:15:46 IST Report Abuse
Sridhar இந்த முடிவுகள் தெரிந்த பிறகு அறிவித்திருக்கலாமே? ஏன் அவசரப்பட்டார்கள்? அந்த அளவுக்கு தொழில்நுட்ப தகவல்கள் ஏற்கனவே இருந்திருந்தால், அதை பகிர்ந்திருக்கலாமே? அனாவசியமாக, வெட்டி பசங்களுக்கு ஏன் சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும்?
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
08-ஜன-202107:21:05 IST Report Abuse
 N.Purushothaman இந்தியர்களின் கண்டுபிடிப்பையும் வடிவமைப்பையையும் உலக அளவில் கொண்டு செல்ல, அங்கீகாரம் பெற பா.ஜ அரசு பெரும் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டு வருகிறது ..ஆனால் அந்நிய கைக்கூலிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் கம்ஸ் இந்தியர்களின் கண்டுபிடிப்பையும் வடிவமைப்பையும் சந்தேக கண் கொண்டு இந்தியர்களையே தாக்கி மட்டம் தட்டி வருகிறது ..தேச விரோத சக்திகள் ...நாட்டு பற்று இல்லாத நயவஞ்சகர்கள் ...
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
07-ஜன-202122:02:13 IST Report Abuse
venkatan இனிமேலாவது அரசு உயிரியல் சம்பந்தமான ஆய்வுகளையும்,ஆய்வர்களையும் உருவாக்கி,ஊக்குவிக்க பெருத்த எடுப்பில் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.குறிப்பாக மருத்துவ அறிவியல் ஆய்வுகளை அனைத்து பல்கலை.யிலும் பாரபட்சம் காட்டாது பயிற்றுவிக்க,ஆய்வு செய்ய யூ ஜி சி ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..காலத்தின் அவசர அவசியம் கருதி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X