கோவாக்சின் தடுப்பூசி; 3ம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கோவாக்சின் தடுப்பூசி; 3ம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றது.இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ‛கோவிஷீல்ட்' தடுப்பூசி தயாரிக்கும் பணியை புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் மேற்கொள்கிறது. அதேபோல், ஐதராபாத்தை சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், 'கோவாக்சின்'
Covaxin, 3rdPhase, Test, Success, Bharat BioTech, பாரத் பயோடெக், கோவாக்சின், 3ம் கட்டம், பரிசோதனை, நிறைவு

புதுடில்லி: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ‛கோவிஷீல்ட்' தடுப்பூசி தயாரிக்கும் பணியை புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் மேற்கொள்கிறது. அதேபோல், ஐதராபாத்தை சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளது. இந்த இரு தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அவசரகால அனுமதியளித்தது. ஆனால், கோவாக்சின் தடுப்பு மருந்தின் 3-வது கட்ட க்ளினிக்கல் பரிசோதனை நிறைவுபெறாத நிலையில், அனுமதியளிக்கப் பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.


latest tamil news


இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 3ஆம் கட்ட பரிசோதனையில் 25,800 தன்னார்வலர்கள் பங்கேற்றதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X