வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டு அவரது வெற்றி பார்லிமெண்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வானார். ஆனால் இந்த வெற்றியை தற்போது அதிபராக உள்ள டிரம்ப் ஏற்க மறுத்து, ஜோ பைடன் தேர்தலில் முறைகேடு செய்து வென்றதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
இந்நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர். பார்லிமெண்ட் கட்டட வளாகத்தில் நுழைந்த ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனால், டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில், பெண் உள்பட நான்கு பேர் பலியாகினர். போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்தனர். 50க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே பார்லி.,யின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றதையடுத்து, பைடனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை பெற்றது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோல்வி ஒப்புக்கொண்டார்

ஜோ பைடனின் வெற்றியை அந்நாட்டு பார்லிமெண்ட் உறுதி செய்த நிலையில், அதிகார மாற்றத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்தார். மேலும், தேர்தல் முடிவில் தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் ஜன.,20ல் முறையாக அதிகார மாற்றம் நடைபெறும் என அறிக்கை விடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE