பொது செய்தி

இந்தியா

காற்று மாசால் கருக்கலைவு அதிகரிப்பு - அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: தெற்காசியாவில் குறிப்பாக வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கருக்கலைவு நிகழ்வதற்கும் காற்று மாசுபாட்டிற்கும் முக்கிய தொடர்பு இருப்பதாக லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியிருக்கும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.காற்று மாசுபாட்டின் விளைவையும், கருக்கலைவையும் மதிப்படும் முதல் ஆய்வாக இது கருதப்படுகிறது. "தெற்காசியாவில் ஆண்டுக்கு 3,49,681 கருக்கலைவுகள் காற்று
AirPollution, PregnancyLoss, India, SouthAsia, Lancet, Study, காற்று மாசு, கருக்கலைப்பு, இந்தியா, ஆய்வு

புதுடில்லி: தெற்காசியாவில் குறிப்பாக வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கருக்கலைவு நிகழ்வதற்கும் காற்று மாசுபாட்டிற்கும் முக்கிய தொடர்பு இருப்பதாக லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியிருக்கும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டின் விளைவையும், கருக்கலைவையும் மதிப்படும் முதல் ஆய்வாக இது கருதப்படுகிறது. "தெற்காசியாவில் ஆண்டுக்கு 3,49,681 கருக்கலைவுகள் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவை. 2000 முதல் 2016 வரையிலான, ஆண்டு கருக்கலைவில் இது 7 சதவீதமாகும்" என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள காற்று தர வழிகாட்டுதலை விட அதிகம் இருக்கும் காற்று மாசினால் 29 சதவீதம் கருக்கலைவுகள் நிகழ்த்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.


latest tamil news


கருக்கலைவு ஏற்பட்ட 34,197 பெண்களை இந்த ஆய்வில் உட்படுத்தியுள்ளனர். அவர்களில் 27,480 பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. 6,717 பேருக்கு குழந்தை இறந்து பிறந்துள்ளது. கருக்கலைவில் 77 சதவீதம் இந்தியாவில், 12 சதவீதம் பாகிஸ்தானில், 11 சதவீதம் வங்கதேசத்தில் பதிவாகியிருக்கிறது. 1998 முதல் 2016 வரை சுகாதாரம் குறித்து வீடுகள் தோறும் நடத்தப்பட்ட ஆய்வு தகவல்களை ஒருங்கிணைத்துள்ளனர். அதில் பெண்கள் கருக்கலைவு மற்றும் குழந்தை பிறந்தது பற்றி கூறிய தகவல்கள் அடங்கும்.


latest tamil news


அத்தகவல்களை வைத்துக்கொண்டு செயற்கைக்கோள் மற்றும் வளிமண்டல நிகழ்வுகளின் இடஞ்சார்ந்த மாற்றங்களை அளவிட்டுள்ளனர். பின்னர் காற்று மாசுக்கு எந்த அளவுக்கு கர்ப்பிணிகள் ஆட்ப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், பெண்களின் கருக்கலைவு அபாயத்தை இது எந்தளவு அதிகரிக்கிறது என்பதையும் மதிப்பிட்டுள்ளனர். இதற்கென ஒரு மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கர்ப்பிணியின் வயது, வளிமண்டல வெப்பநிலை மற்றும் ஈரப்பதம், பருவகால மாறுபாடு, கருக்கலைவில் இருந்த நீண்ட கால போக்குகள் ஆகியவற்றை மாற்றியமைத்து முடிவுகளை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஒரு கன மீட்டர் பரப்பில் 10 மைக்ரோ கிராம் அளவிற்கு மாசு அதிகரித்தாலும் கருக்கலைவுக்கான அபாயம் 3 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

இது பற்றி பெக்கிங் பல்கலைக்கழக ஆய்வாசிரியர் தாவோ கூறியதாவது: உலகளவில் தெற்காசியாவில் தான் அதிக கருக்கலைவு நிகழ்கிறது. இப்பிராந்தியம் உலகின் மிகவும் காற்று மாசான பகுதிகளில் ஒன்று. மோசமான காற்றின் தரம் இப்பிராந்தியத்தில் கருக்கலைவுக்கு கணிசமான காரணமாக இருக்கலாம் என்று எங்கள் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. ஆபத்தான நிலையிலுள்ள காற்று மாசை சரிசெய்ய நடவடிக்கை தேவை. என்று கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
08-ஜன-202101:24:38 IST Report Abuse
கொக்கி குமாரு காற்று மாசால் கருக்கலைவு அதிகரிப்பு. ஆக எடப்பாடி பதவி விலக வேண்டும் - சுடலை.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
07-ஜன-202118:23:38 IST Report Abuse
S.Baliah Seer பிரைவேட் ,பிரைவேட் என்று சொல்லி டிரைன்,பஸ் போக்குவரத்து மக்கள் தொகைக்கேற்ப இல்லாமல் செய்து விட்டார்கள்.இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் மட்டுமே காற்று அதிக அளவு மாசுபடுகிறது.தொழிற்சாலைகளின் மாசை விட வாகனங்கள் புகையால் ஏற்படும் மாசு அதிகம்.பதவி வெறி பிடித்தவர்கள் இவற்றைப் பற்றி கவலை படமாட்டார்கள்.
Rate this:
Cancel
07-ஜன-202117:36:25 IST Report Abuse
ஆரூர் ரங் பஞ்சாபில் லட்சம் டன் வைக்கோலை எரிக்கும் சமூக விரோத செயலைத் தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தால் பீட்சா பர்கர் விவசாயிக் கூட்டம் எதிர்த்துப் போராடுது. அதுக்கு தீயமுக இத்தாலி மாபியா கும்பல்😡 ஆதரவு. அதே புகை இவங்களையும் பாதிக்கபோகிறது எனும் அறிவு தான் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X