நிறத்தின் அடிப்படையில், கொழுப்புகளை வெள்ளை, பழுப்பு என்று மருத்துவர்கள் பிரிப்பதுண்டு. இதில் வெள்ளையைப் போலவே பழுப்பும் கெடுதலானது என்று மருத்துவர்கள் கருதியதுண்டு. ஆனால், அண்மையில், 'நேச்சர்' இதழில் வெளிவந்துள்ள ஆய்வின்படி, பழுப்பு கொழுப்பு மிக நல்லது என்பது தெரியவந்துள்ளது. வழக்கமாக மனித உடலில் வெள்ளை கொழுப்பின் சதவீதமே அதிகம்.
பழுப்பு கொழுப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். குறிப்பாக குழந்தைகளின் உடலில் பழுப்பு கொழுப்பு அதிகம். வயது ஆகும்போது, இக் கொழுப்பை உற்பத்தி செய்யும் திறன் குறைவதாகவே மருத்துவர்கள் கருதினர். ஆனால், அண்மைக்கால ஆய்வுகள், பெரியவர்களின் உடலிலும் மிகச் சிறிய அளவு பழுப்பு கொழுப்பு உற்பத்தியாவதை உறுதி செய்துள்ளனர்.
மேலும், இக்கொழுப்பு உள்ளோருக்கு, இதய நோய் முதல் பல வாழ்க்கை முறை நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என்பதையும் நேச்சர் இதழில் வெளியாகியுள்ள ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
இருந்தாலும், உணவிலிருந்து சக்தியை, பழுப்புக் கொழுப்பாக மாற்றும் யுக்தி, மருத்துவர்களுக்கு இன்னும் பிடிபடவில்லை என்பது தான் குறை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE