சிலிக்கனுக்கு போட்டியாக வைரம்?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சிலிக்கனுக்கு போட்டியாக வைரம்?

Added : ஜன 07, 2021
Share
மின்னணு துறையில் கோலோச்சும் பொருள் சிலிக்கன். மணலை சுத்திகரித்து எடுக்கப்படும் சிலிக்கனுக்கு போட்டியாக, விரைவில் வைரம் வரக்கூடும். பூமிக்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் வைரம், மிகவும் கடினமான பொருள். ஆனால், அதையும் ஆற்றல் மிக்க இழுவிசைக்கு உட்படுத்தி சோதித்தனர், விஞ்ஞானிகள்.ஆய்வகத்தில் விஞ்ஞானிகள், 1,000 நேனோ மீட்டர் நீளமும், 300 நேனோ மீட்டர் அகலமும் கொண்ட தகடுகளாக
சிலிக்கனுக்கு போட்டியாக வைரம்?

மின்னணு துறையில் கோலோச்சும் பொருள் சிலிக்கன். மணலை சுத்திகரித்து எடுக்கப்படும் சிலிக்கனுக்கு போட்டியாக, விரைவில் வைரம் வரக்கூடும். பூமிக்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் வைரம், மிகவும் கடினமான பொருள். ஆனால், அதையும் ஆற்றல் மிக்க இழுவிசைக்கு உட்படுத்தி சோதித்தனர், விஞ்ஞானிகள்.

ஆய்வகத்தில் விஞ்ஞானிகள், 1,000 நேனோ மீட்டர் நீளமும், 300 நேனோ மீட்டர் அகலமும் கொண்ட தகடுகளாக வைரத்தை வடித்தெடுத்தனர். இழுவிசைக்கு ஆளான வைரத் தகடுகளின், மின்னணு மற்றும் ஒளியியல் தன்மைகள் வியத்தகு மாற்றத்தை அடைந்தன.
அதாவது, மின்சாரத்தை கடத்தும் திறன் வைரத் தகடுகளுக்கு கிடைத்தது. மேலும், அந்த கடத்தும் திறனின் விளைவாக, போட்டான்களை உமிழும் திறனும் நேனோ மட்டத்தில் உருவானது.

இந்த இரண்டு திறன்களும் புதுமையான மின்னணு, 'சர்க்கியூட்'டுகளை உருவாக்க பயன்படக்கூடும் என, 'சயன்ஸ்' இதழில் வந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X