சோதனையான, 2020ம் ஆண்டு, ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இதை, 'ரோபோ' தயாரிக்கும் பாஸ்டன் டைனமிக்ஸ், வித்தியாசமான வீடியோ மூலம் கொண்டாடியது. இதுவரை அந்நிறுவனம் தயாரித்து சோதித்து வரும் அனைத்து வடிவ ரோபோக்களையும் ஒரே அறையில் நிறுத்தியது. பின், 'டு யு லவ் மீ?' என்ற ஆங்கில பாப் பாடலுக்கு, தாளம் தப்பாமல் அத்தனை ரோபோக்களையும் ஆடவைத்தது பாஸ்டன் டைனமிக்ஸ். இந்த காணொளி, இணையத்தில் கடந்த வாரம் முழுதும் வைரலாக பரவியது.
'கொரோனா கிருமியைத்தான் வெறுக்கிறீர்கள், ரோபோக்களாகிய, எங்களையும் வெறுக்கிறீர்களா?' என்று அந்த ரோபோக்கள், மனிதர்களைப் பார்த்துக் கேட்பது போல இருந்தது அந்த காணொளி. இரண்டு கால்களில் சக்கரங்கள் பொறுத்திய, 'ஹேண்டில்' ரோபோ, நாய் வடிவை ஒத்திருக்கும், 'ஸ்பாட்' ரோபோ, மனித வடிவத்தைக் கொண்ட, 'அட்லஸ்' ரோபோ என்று அனைத்தும் பாஸ்டன் டைனமிக்சின் படைப்புகள். இவை, 2013 முதல் சோதனைக் கூடத்தில், வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்து வரும் ரோபோக்கள். அந்த வீடியோவை புத்தாண்டு பரிசாக பாஸ்டன் டைனமிக்ஸ் வெளியிட்டிருக்கலாம்.
ஆனால், நடை, ஓட்டம், நடனம், நிதானம் தவறாமை, வேகக் கட்டுப்பாடு, எடை தாங்கும் திறன், கைகளின் லாவகம் என, ரோபோக்களின் திறன்களைக் காட்டும், 'டெமோ'வாகவே அந்த வீடியோ இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE