அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அதிபராக ஜோ பைடன் இன்று எலக்டரால் காலேஜ் உறுப்பினர்களால் அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து அமெரிக்க குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டன் டிசியில் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 கலவரக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
![]()
|
இது உலக அளவில் சமூக வலைதளமான டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. டொனால்ட் ட்ரம்புக்கு கண்டனங்களும் எதிர்ப்பும் குவிந்து வருகின்றன. வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் வெள்ளை மாளிகை மீதான இந்த தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவத்துக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அமெரிக்காவின் போட்டி நாடான ரஷ்யா இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா சாக்நோவா பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஜனநாயகத்தின் நவீன முறைப்படி அமெரிக்க தேர்தல் நடைபெறவில்லை .
![]()
|
குடியரசு கட்சி ஆதரவாளர்கள் போராட்டம் ஒருபக்கம் இருந்தாலும் 2020 அமெரிக்க தேர்தலில் விதிமீறல்கள் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
உலக நாட்டு தலைவர்கள் பலர் டிரம்பின் ஆதரவாளர்களின் வன்முறையை எதிர்த்துவரும் நிலையில் அமெரிக்க தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டும் ரஷ்யாவின் இந்த வித்தியாசமான அறிக்கை வியப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement