சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

வடை போச்சே!

Added : ஜன 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வடை போச்சே!'அரசு நிர்வாகத்தில், தொய்வு ஏற்படக் கூடாது என்பதில், பிரதமர் மோடி தெளிவாக இருக்கிறார்' என, அவரை பாராட்டுகின்றனர், மத்திய அரசில் உள்ள மூத்த அதிகாரிகள். பிரதமர் மோடி தலைமையிலான, முந்தைய அரசில், அமைச்சர்களாக இருந்த அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர், சிக்கலான பிரச்னைகளில், அவருக்கு சரியான ஆலோசனைகளை வழங்கி வந்தனர். இரண்டாவது முறையாக, தே.ஜ., கூட்டணி ஆட்சி

அக்கம் பக்கம்

வடை போச்சே!

'அரசு நிர்வாகத்தில், தொய்வு ஏற்படக் கூடாது என்பதில், பிரதமர் மோடி தெளிவாக இருக்கிறார்' என, அவரை பாராட்டுகின்றனர், மத்திய அரசில் உள்ள மூத்த அதிகாரிகள். பிரதமர் மோடி தலைமையிலான, முந்தைய அரசில், அமைச்சர்களாக இருந்த அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர், சிக்கலான பிரச்னைகளில், அவருக்கு சரியான ஆலோசனைகளை வழங்கி வந்தனர். இரண்டாவது முறையாக, தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைத்தபோது, உடல்நிலை காரணமாக, இருவரும் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. அடுத்த சில மாதங்களிலேயே, இருவரும் இறந்து விட்டனர். உள்துறை அமைச்சரான அமித் ஷா, இந்த இழப்பை சரிக்கட்டுவார் என, பா.ஜ., வட்டாரங்கள் கிசுகிசுத்தன. அமித் ஷாவுக்கு, நிர்வாக பணிகளை விட, கட்சி பணிகளில் தான் ஆர்வம் அதிகம்.
'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்ற, ஒற்றைக் குறிக்கோளுடன், நாடு முழுதும் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மும்மூர்த்திகளாக செயல்பட்டு, பிரதமருக்கு உதவுகின்றனர். சீனாவுடன் எல்லை பிரச்னை ஏற்பட்டபோது, ராஜதந்திர ரீதியாக ஜெய்சங்கரையும், எதிர்க்கட்சிகளை சமாளிக்க ராஜ்நாத் சிங்கையும் களத்தில் இறக்கினார் பிரதமர். அவர்களும், சாமர்த்தியமாக காய் நகர்த்தி, காரியத்தை சாதித்தனர். ஜெட்லியும், சுஷ்மாவும் இல்லாததால், நிர்வாகம் தொய்வடையும் என எதிர்பார்த்த எதிர்க்கட்சி தலைவர்கள், 'வடை போச்சே...' என, திருதிருவென
விழிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
08-ஜன-202106:01:19 IST Report Abuse
NicoleThomson ஆனால் கோபெக் என்று கோஷம் போடும் கறுப்பர் கூட்டமோ கார்பொரேட் முன்னேற்ற கழகத்தை தான் தாங்கி பிடிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X