பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜன 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜன., 8, 2012விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்து கூகையூர் என்ற சிற்றுாரில், 1910 ஏப்., 17ம் தேதி பிறந்தவர், அடிகளாசிரியர். இவரது இயற்பெயர், குருசாமி.உ.வே.சாமிநாதையரிடம் தமிழ் கற்றார். சென்னை பல்கலையில், 'தமிழ்ப்புலவர்' பட்டம் பெற்றார். மயிலம் தமிழ் கல்லுாரி, சென்னை பல்கலை, தஞ்சை பல்கலை ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றினார். சமஸ்கிருதம், இலக்கணம், ஜோதிடம்
  இதே நாளில் அன்று


ஜன., 8, 2012



விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்து கூகையூர் என்ற சிற்றுாரில், 1910 ஏப்., 17ம் தேதி பிறந்தவர், அடிகளாசிரியர். இவரது இயற்பெயர், குருசாமி.உ.வே.சாமிநாதையரிடம் தமிழ் கற்றார். சென்னை பல்கலையில், 'தமிழ்ப்புலவர்' பட்டம் பெற்றார். மயிலம் தமிழ் கல்லுாரி, சென்னை பல்கலை, தஞ்சை பல்கலை ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றினார். சமஸ்கிருதம், இலக்கணம், ஜோதிடம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர். இவர் மொத்தம், 64 நுால்களை வெளியிட்டுள்ளார். கல்வெட்டு ஆய்வுகளிலும், ஆர்வமிக்கவராக விளங்கினார். அரிய ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வந்தார். தொல்காப்பியர் விருது முதல் ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். இவரது நுால்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 2012 ஜன., 8ம் தேதி, தன், 101வது வயதில் இயற்கை எய்தினார்.
தமிழறிஞர் அடிகளாசிரியர் காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
08-ஜன-202103:41:16 IST Report Abuse
.Dr.A.Joseph எவ்வளவு எளிமையான தோற்றம். இந்த எளிமைதான் ஐயாவை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. புகழ் நிலைக்கட்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X