வெற்றி எளிதாகும்!
விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி, தமிழக காங்கிரசில் உருவாக்கப்பட்டு உள்ள, 'ஜம்போ' கமிட்டிகளால், மோசமான விளைவுகள் எதுவும் ஏற்படாது. இது, கட்சிக்குள் இருக்கும் பிளவுகளை சரிசெய்து, அனைவரையும் ஒன்றிணைக்கும். காங்கிரஸ் -- தி.மு.க., கூட்டணியின் வெற்றியை எளிதாக்கும்.
மணிசங்கர் அய்யர்
மூத்த தலைவர்,காங்கிரஸ்
மற்றவர்களுக்கு போதனை!
எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக ஒற்றுமை இன்றியமை யாதது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு -- காஷ்மீர் முடக்கப்பட்டு, மிக மோசமான நிலையில் உள்ளது. அப்படியிருக்கையில், சிறுபான்மையினரை கண்ணியத்துடன் நடத்துவது குறித்து, மற்ற நாடுகளுக்கு நாம் போதிக்கிறோம்.
மெகபூபா முப்தி
தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
தனியார்மயமாக்கும் முயற்சி!
ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாரதிய ஜன சங்கம் ஆகியவை, ஆரம்ப காலத்திலேயே, தனியார் மயமாக்கலை ஆதரித்து வந்துள்ளன. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை கூட, அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். மோடி தலைமையிலான அரசு, புதிய வேளாண் சட்டங்கள் வாயிலாக, விவசாயத் துறையை தனியார்மயமாக்க விரும்புகிறது.
கமல்நாத்
மூத்த தலைவர், காங்கிரஸ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE