புதுடில்லி:கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 16 ஆயிரத்து, 859 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம், 96.36 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால், 20 ஆயிரத்து, 346 பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, மூன்று லட்சத்து, 95 ஆயிரத்து, 278 ஆக உயர்ந்துள்ளது.
இதில், இரண்டு லட்சத்து, 28 ஆயிரத்து, 83 பேர், சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பெறுவோர் விகிதம், 2.19 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஒரே நாளில், 19 ஆயிரத்து, 587 பேர், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இதையடுத்து, தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 16 ஆயிரத்து, 859 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தோர் விகிதம், 96.36 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனாவால், 222 பேர் உயிரிழந்தனர். இதில், அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில், 66 பேர் உயிரிழந்தனர். கேரளாவில், 25; மேற்கு வங்கத்தில், 22; டில்லியில், 16 உயிரிழப்புகளும் பதிவாகின. இதையடுத்து, பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து, 336 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், இறப்பு விகிதம், 1.45 சதவீதமாக குறைந்துள்ளது. அதிக பலி எண்ணிக்கையுடன், மஹாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு, 49 ஆயிரத்து, 825 பேர் உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து, 12 ஆயிரத்து, 188 உயிரிழப்புகளுடன், இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE