கொரோனா பிரசாரம் அமிதாபை நீக்க மனு

Added : ஜன 07, 2021
Share
Advertisement
புதுடில்லி:மொபைல் போனில் ஒலிக்கும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின், கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை நீக்க வலியுறுத்தி, டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டில்லியைச் சேர்ந்த, சமூக ஆர்வலரான ராகேஷ், டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்; அதில் கூறப்பட்டுள்ளதாவது:மொபைல் போன், 'காலர் ட்யூன்'களில், அமிதாப் பச்சன்,

புதுடில்லி:மொபைல் போனில் ஒலிக்கும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின், கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை நீக்க வலியுறுத்தி, டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த, சமூக ஆர்வலரான ராகேஷ், டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்; அதில் கூறப்பட்டுள்ளதாவது:மொபைல் போன், 'காலர் ட்யூன்'களில், அமிதாப் பச்சன், கொரோனா தடுப்பு குறித்து பேசுவது ஒலிக்கிறது. அமிதாப் பச்சன் உள்ளிட்ட அவர் குடும்பத்தினர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். மேலும், இந்த பிரசாரத்திற்கு அமிதாப்பிற்கு, மத்திய அரசு பணம் வழங்குகிறது.

கொரோனா பரவலின் போது, ஏராளமானோர் சமூக நற்பணிகளை இலவசமாக செய்துஉள்ளனர். தங்கள் சொந்த பணத்தில் ஏழைகளுக்கு, உணவு, உடை, இருப்பிட வசதிகளை செய்து கொடுத்து உள்ளனர்.இது போன்ற பணிகளுக்கு பாராட்டு பெற்ற கொரோனா வீரர்கள் பலர், பணம் எதுவும் வாங்காமல் நாட்டுக்காக இலவச சேவைகளை வழங்க தயாராக உள்ளனர்.

அத்தகையோரை பயன்படுத்தி, மொபைல் போன் காலர் ட்யூன்களில், கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்யலாம். மத்திய அரசுக்கும் பணம் மிச்சமாகும். எனவே, நீதியை நிலைநாட்டும் பொருட்டு, அமிதாப் பச்சனின் கொரோனா தடுப்பு காலர் ட்யூனை நீக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. நேற்று இந்த மனுவை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், விசாரணையை, வரும், 18ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X