பொது செய்தி

இந்தியா

'இ - டெண்டர்' வழக்கு 15 இடங்களில் சோதனை

Added : ஜன 07, 2021
Share
Advertisement
புதுடில்லி:'இ - டெண்டர்' மோசடி வழக்கில், மத்திய பிரதேச மாநில முன்னாள் தலைமைச் செயலருக்கு சொந்தமான இடம் உள்ளிட்ட, 15 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில அரசின், இ - டெண்டர் இணையதளத்தை முடக்கி, ஒப்பந்தங்களை கைப்பற்ற, மோசடிகள் நடந்ததாக கூறப்படுகிறது.அதன்

புதுடில்லி:'இ - டெண்டர்' மோசடி வழக்கில், மத்திய பிரதேச மாநில முன்னாள் தலைமைச் செயலருக்கு சொந்தமான இடம் உள்ளிட்ட, 15 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில அரசின், இ - டெண்டர் இணையதளத்தை முடக்கி, ஒப்பந்தங்களை கைப்பற்ற, மோசடிகள் நடந்ததாக கூறப்படுகிறது.அதன் வாயிலாக, 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

கடந்த ஆண்டு, முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., ஆட்சியில் இருந்தபோது, இந்த வழக்கில், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஏழு தனியார் நிறுவனங்களின் இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கத் துவங்கியது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, மத்திய பிரதேச தலைநகர் போபால், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் மற்றும் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள, 15 இடங்களில், அமலாக்க துறை அதிகாரிகள், கடந்த சில நாட்களாக சோதனை நடத்தினர்.சில இடங்களில், நேற்று வரை சோதனை தொடர்ந்து நடந்ததாக, அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இதில், மத்திய பிரதேச மாநில முன்னாள் தலைமை செயலரான கோபால் ரெட்டிக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X