'கடனை கேட்டால் தற்கொலை செய்வதா?'

Added : ஜன 07, 2021
Share
Advertisement
நாக்பூர்:'வாங்கிய கடனை திரும்பச் செலுத்த, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் அதிகாரி வலியுறுத்துவதை, தற்கொலைக்கு துாண்டுவதாக கருத முடியாது' என, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டம், ஷிர்பூரை சேர்ந்தவர் சவுகான். இவர், வாகனம் வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்திடம், 6.21 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.இதை, நான்கு

நாக்பூர்:'வாங்கிய கடனை திரும்பச் செலுத்த, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் அதிகாரி வலியுறுத்துவதை, தற்கொலைக்கு துாண்டுவதாக கருத முடியாது' என, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டம், ஷிர்பூரை சேர்ந்தவர் சவுகான். இவர், வாகனம் வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்திடம், 6.21 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.இதை, நான்கு ஆண்டுகளில், மாதம் தலா, 17 ஆயிரத்து, 800 ரூபாய் என, திரும்பச் செலுத்த ஒப்புக் கொண்டிருந்தார்.ஆனால் சவுகான், கடன் தவணைகளை சரியாக செலுத்தவில்லை.

இதையடுத்து, கடனை திருப்பிச் செலுத்தக் கோரி, நிதி நிறுவனத்தின் அதிகாரி ரோஹித் நலவாடே, சவுகானிடம் அடிக்கடி வலியுறுத்தினார்.இதனால், மனவேதனையடைந்த சவுகான் தற்கொலை செய்து கொண்டார். சவுகான் எழுதி வைத்திருந்த கடிதத்தில், கடனை திருப்பி செலுத்தக் கோரி, நிதி நிறுவன அதிகாரி நலவாடே தன்னிடம் வலியுறுத்தியதால், தற்கொலை செய்து கொள்வதாக எழுதிஇருந்தார்.

இதையடுத்து, நிதி நிறுவன அதிகாரி நலவாடே மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இதன் பின், ஜாமினில் வெளிவந்த நலவாடே, தன் மீது போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வினய் தேஷ்பாண்டே,அனில் கிலோர் ஆகியோர் அடங்கிய அமர்வு, நலவாடே மீது போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து, உத்தரவிட்ட தாவது:கடன் வாங்கியவர், அதை முறைப்படி செலுத்த வேண்டியது அவசியம். கொடுத்த கடனை திருப்பிச் செலுத்தம்படி கேட்பது தவறல்ல.

நிதி நிறுவனம் கொடுத்த கடனை வசூலிக்க வேண்டிய கடமை, அந்நிறுவனத்தின் அதிகாரிக்கு உள்ளது. அதனால், கடனை திருப்பி செலுத்த கோரி, சவுகானிடம் நலவாடே வலியுறுத்தியதை, தற்கொலைக்கு துாண்டியதாக கருத முடியாது. அவர் மீது, போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X