பொது செய்தி

இந்தியா

26ல் நடக்கும் டிராக்டர் பேரணிக்கு நேற்று ஒத்திகை?

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், டில்லியில் நேற்று, டிராக்டர் பேரணி நடத்தினர். 'வரும், 26ல், குடியரசு தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள பேரணிக்கான ஒத்திகை இது' என, விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, மத்திய அரசுடன், விவசாய சங்க பிரதிநிதிகள், இன்று மீண்டும் பேச்சு நடத்தவுள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு
டிராக்டர் பேரணி, ஒத்திகை, அரசு, விவசாயிகள், வேளாண் சட்டம்

புதுடில்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், டில்லியில் நேற்று, டிராக்டர் பேரணி நடத்தினர். 'வரும், 26ல், குடியரசு தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள பேரணிக்கான ஒத்திகை இது' என, விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, மத்திய அரசுடன், விவசாய சங்க பிரதிநிதிகள், இன்று மீண்டும் பேச்சு நடத்தவுள்ளனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில், 40 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.பிரச்னைபோராட்டத்துக்கு தீர்வு காண, மத்திய அரசு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், ஏழு முறை பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அரசு, இன்று எட்டாம் சுற்று பேச்சு நடத்த உள்ளது.

இதற்கிடையில், 'போராட்டத்துக்கு, மத்திய அரசு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லாவிடில், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். வரும், 26ல், குடியரசு தினத்தன்று, டில்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்துவோம்' என்றார். இந்நிலையில், இந்த பிரமாண்ட பேரணிக்கு ஒத்திகையாக, நேற்றும் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர்.
போராட்டம்டில்லியின் சிங்கூ, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில், விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடந்தது. இந்த பேரணியால், டில்லியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ஜோகிந்தர் சிங் அக்ராஹன் கூறியதாவது:குடியரசு தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணியின் ஒத்திகையாகவே, இந்த பேரணி நடத்தப்பட்டது. குடியரசு தினத்தன்று நடக்கும் பேரணியில், 3,500 டிராக்டர்கள் பங்கேற்கின்றன. எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றா விட்டால், போராட்டம்தீவிரமடையும். இவ்வாறு, அவர் கூறினார்.
போராட்டத்தால் கொரோனா அதிகரிக்குமா?மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
உச்ச நீதிமன்றத்தில், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்ரியா பண்டிட் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த ஆண்டு, நாடு முழுதும் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. அப்போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப, டில்லி ஆனந்த் விஹார் பஸ் நிலையத்தில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் திரண்டனர். அதேபோல், டில்லியில் நடந்த தப்லிகி் ஜமாத்தின் கூட்டத்திலும், சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. இந்த இரண்டு சம்பவங்களும் தான், டில்லியில் கொரோனா பரவல் அதிகரிக்க, பெரிதும் காரணமாக இருந்தது. இது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகியிருந்தார்.

அப்போது, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே உத்தரவிட்டதாவது: டில்லியில் தற்போது, விவசாயிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் போராட்டம் நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில், தப்லிகி ஜமாத் மாநாட்டில், இதேபோன்று சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் பலர் திரண்டதால், கொரோனா பாதிப்பு அதிகரித்தது.தற்போது டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திலும், அதுபோல், கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதா. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனரா; அங்கு என்ன நடக்கிறது என்பதை, மத்திய அரசு சொல்ல வேண்டும்.இவ்வாறு, தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், 'விவசாயிகள், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, போராட்டத்தில் ஈடுபடவில்லை,'' என்றார். மேலும், விவசாயிகள் போராட்டத்தில் என்ன நடக்கிறது; என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி, இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்வதாக, துஷார் மேத்தா தெரிவித்தார்.


அமெரிக்காவிலிருந்து வந்த மாணவர்பஞ்சாப் மாநிலம், ஜலந்தரைச் சேர்ந்தவர் நவ்பால் சிங், 22. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கல்லுாரியில், பொறியியல் படித்து வருகிறார். இவரது தந்தை மற்றும் தாத்தா விவசாயிகள். டில்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதை அறிந்த நவ்பால் சிங், அதில் பங்கேற்க விரும்பினார்.இந்தியாவுக்கு சமீபத்தில், நவ்பால் சிங் வந்தார். ஜலந்தரில் உள்ள தன் வீட்டுக்கு சென்ற அவர், 5ம் தேதி முதல் தினமும், ஜலந்தரிலிருந்து, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கூ பகுதிக்கு வந்து, போராட்டத்தில் பங்கேற்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜன-202118:51:00 IST Report Abuse
kulandhai Kannan தொலைபேசி துறை ஊழியர்கள் மரியாதை இழந்ததைப் போல், விவசாயிகளும் மரியாதை இழக்கும் காலம் வந்துவிடப் போகிறது. கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் சீக்கியர்களே. 1947க்கும் 1984க்கும் 37 ஆண்டு வித்தியாசம். 1984 க்கும் 2021க்கும் அதே 37 ஆண்டுகள். புரிந்தால் சரி.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-ஜன-202117:11:51 IST Report Abuse
sankaseshan When they say tractors procession nos on 26 th. their intention is clear . They don't want Republic day celebration to take place . It is now clear they are backed by khalistani goons . Supreme court to tkae up suyo moto case against them put them under custody .
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
08-ஜன-202116:14:44 IST Report Abuse
Loganathaiyyan 5 ஏக்கருக்கும் குறைவாக வைத்திருந்து அதில் தான் தனது குடும்பம் எல்லா வேலையையும் செய்து கொஞ்சம் வெளி உதவியுடன் அவர்கள் தான் விவசாயிகள். 100,1000 ஏக்கர் வைத்து பலரை வேலைக்கு அமர்த்தி விவசாயம் செய்யவைத்து அவர்கள் மிராசுதார்கள், அவர்கள் விவசாய பொருள் வியாபாரிகள். மற்றும் இப்போது நடக்கும் போராட்டம் இடைத்தரகர்கள் ஒழிப்பு இந்த மூன்று வேளாண் சட்டத்தினால்??? ஆகவே இந்கு அட்டூழியம் செய்பவர்கள் இடை தரகர்களே அன்றி விவசாயிகள் அல்லவே அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X