பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் தொழில் வளர்ச்சிக்கு ரூ.28,400 கோடி திட்டம்

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஜம்மு:ஜம்மு - காஷ்மீர் அரசு, 28 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் வளர்ச்சி திட்டத்தை அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீரில், முதன் முறையாக, குக்கிராமம் முதல் நகர்ப்புறம் வரை தொழில், வேலைவாய்ப்பு, முதலீடு ஆகியவற்றை ஊக்குவிக்க, 28 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மதிப்பிலான,


ஜம்மு:ஜம்மு - காஷ்மீர் அரசு, 28 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் வளர்ச்சி திட்டத்தை அறிவித்துள்ளது.



latest tamil news




ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீரில், முதன் முறையாக, குக்கிராமம் முதல் நகர்ப்புறம் வரை தொழில், வேலைவாய்ப்பு, முதலீடு ஆகியவற்றை ஊக்குவிக்க, 28 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மதிப்பிலான, தொழில் வளர்ச்சி திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் வாயிலாக உள்ளூரைச் சேர்ந்த, 4.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன், இந்த பகுதியில், சமத்துவ சமூக, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு வேலைகளை தாண்டி, தயாரிப்பு மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.


latest tamil news




இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில், தயாரிப்பு தொழில் துவங்குவோருக்கு, இயந்திர தளவாட முதலீடுகளில், 50 சதவீதம்; நகர்ப்புறங்களில், 30 சதவீதம் மானியம் வழங்கப்படும். தற்போது, ஜம்மு - காஷ்மீரில் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்களும், நடைமுறை மூலதன தேவைகளுக்காக பெறும் கடனுக்கு, வட்டி மானியம் தரப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.


கவர்னர் ஆலோசனை



எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், என்.எஸ்.ஜம்வால், நேற்று, ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து பேசினார். அப்போது, எல்லையில் பாக்., பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை தடுக்க எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜன-202107:11:29 IST Report Abuse
ஆப்பு 24000 கோடிக்கும் அடிக்கல் நாட்டிருவாங்க.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
08-ஜன-202109:10:45 IST Report Abuse
கொக்கி குமாரு அடிக்கல் நாட்டாம நம் வீட்டில் அரை மணிநேரத்தில் இட்லியும், சட்னியும் சுட்டு தருவதுபோல் அரை மணி நேரத்தில் எல்லா வளர்ச்சி பணிகளையும் செய்துவிட முடியுமா? அததற்கு காலம், நேரம் உண்டு. பொறுமை காக்கவும்....
Rate this:
Cancel
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) நன்றிக்கெட்ட தேசத்துரோக கூட்டமாச்சே செய்தும் பிரயோசனம் இருக்காதே
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
08-ஜன-202101:00:45 IST Report Abuse
கொக்கி குமாரு சுடலை மைண்ட் வாய்ஸ்: காஸ்மீரில் நாம ஆட்சியில் இருந்திருந்தா 28400 கோடியில் 20000 கோடிகளையாவது ஆட்டையை போட்டிருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X