அரசியல் செய்தி

தமிழ்நாடு

அழகிரி வந்ததும் தி.மு.க., உடையும்: முதல்வர் பழனிசாமி கணிப்பு

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
திருப்பூர் :''அழகிரி அரசியலுக்கு வந்த பின், தி.மு.க., சுக்குநுாறாக உடையும்; அ.தி.மு.க.,வை எப்போதும் உடைக்க முடியாது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.திருப்பூர் அருகே ஊத்துக்குளியில் நேற்று நடந்த அ.தி.மு.க., பிரசார கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது:வாழ்நாள் முழுதும், மக்களுக்காக வாழ்ந்து, மக்கள் மனதில் நின்ற, எம்.ஜி.ஆர்., - ஜெ., வழியில், ஆட்சி செய்கிறோம். அவிநாசி - அத்திக்கடவு
CM, chiefminister, edapadipalanisamy, EPS, cmEPs, CMedapadipalanisamy, cmpalanisamy, palanisamy, முதல்வர், முதல்வர்இபிஎஸ், முதல்வர்இ.பி.எஸ்., முதல்வர் பழனிசாமி, முதல்வர் எடப்பாடிபழனிசாமி, முதல்வர்எடப்பாடிபழனிசாமி, எடப்பாடிபழனிசாமி, பழனிசாமி, இ.பி.எஸ்., இபிஎஸ், 
அழகிரி, மு.க.அழகிரி,

திருப்பூர் :''அழகிரி அரசியலுக்கு வந்த பின், தி.மு.க., சுக்குநுாறாக உடையும்; அ.தி.மு.க.,வை எப்போதும் உடைக்க முடியாது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.

திருப்பூர் அருகே ஊத்துக்குளியில் நேற்று நடந்த அ.தி.மு.க., பிரசார கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது:வாழ்நாள் முழுதும், மக்களுக்காக வாழ்ந்து, மக்கள் மனதில் நின்ற, எம்.ஜி.ஆர்., - ஜெ., வழியில், ஆட்சி செய்கிறோம். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றி, 60 ஆண்டு கால கனவை நனவாக்கியுள்ளோம்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு ஒன்றுமே தெரியாது; தவறான தகவலை திட்டமிட்டு பரப்பி வருகிறார். என் மடியில் கனமில்லை; அதனால், வழியில் பயமில்லை. தி.மு.க., ஆட்சியில் தான், ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த, 58 பேர் சொத்து சேர்த்துள்ளனர். நாங்கள் அரசியலுக்கு வந்து, சொத்து சேர்க்கவில்லை.

ஈரோட்டில் முதல்வர் பழனிசாமி 2வது நாளாக பிரசாரம் செய்தார். அப்போது, அதிமுக ஆட்சியில் அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டதால் உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் விகிதாச்சாரம் கணிசமாக உயர்ந்தது என பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் இப்போது சாதிச்சண்டை, மதச்சண்டை, அரசியல் அடாவடி இல்லை; திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து அதிகரிக்கும்; அமைதியாக வாழ முடியாது என்றார், முதல்வர்.

அழகிரி அரசியலுக்கு வந்த பின், தி.மு.க., சுக்குநுாறாக உடையும்; அ.தி.மு.க.,வை எப்போதும் உடைக்க முடியாது. ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர், அதிகாரத்துக்கு வந்து விடக்கூடாது என்று நினைக்கும் ஸ்டாலின், எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்.

மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடியாது என்பதால், அழகிரியை ஓரங்கட்டி விட்டார்.உப்பை தின்றவர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்; தவறு செய்த ஸ்டாலினுக்கு, வரும் சட்டசபை தேர்தலில், நிச்சயம் தண்டனை கிடைக்கும்; மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-ஜன-202111:18:14 IST Report Abuse
Malick Raja ஆணினத்தின் தன்மானம் காத்த தலைவன் ....
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
08-ஜன-202122:02:39 IST Report Abuse
mrsethuraman  அது இருக்கட்டும் சின்னம்மா வெளிய வரபோறாங்க அதிமுக பத்திரம்
Rate this:
Cancel
Ramamurthy N - Chennai,இந்தியா
08-ஜன-202120:13:25 IST Report Abuse
Ramamurthy N முதலில் இவர்கள் தங்களுக்குள் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து முடிக்கட்டும். அதற்குள் எப்படி கட்சி உடைந்தது என்று தெரியும். மேலும் பாஜக, பாமக போன்ற கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதற்குள் இவர்கள் நிலைமை தெரிந்துவிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X