பொது செய்தி

தமிழ்நாடு

'ஆட்டத்தை' முடித்த அரசு:'அதிகார' கூட்டத்தையும் கலைக்குமா?

Updated : ஜன 09, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: அறநிலையத் துறையில், கூடுதல் கமிஷனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ரமண சரஸ்வதி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களால், ஏற்கனவே இத்துறையில், கோலோச்சி வந்த உயர் அதிகாரிகளின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், மாநிலம் முழுதும், 38 ஆயிரம் கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் உள்ளன. வருமானம் மிகுந்த அரசுத்
அறநிலையத்துறை, அதிகாரி, அரசு, கோவில்கள், கோயில்கள்

சென்னை: அறநிலையத் துறையில், கூடுதல் கமிஷனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ரமண சரஸ்வதி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களால், ஏற்கனவே இத்துறையில், கோலோச்சி வந்த உயர் அதிகாரிகளின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், மாநிலம் முழுதும், 38 ஆயிரம் கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் உள்ளன. வருமானம் மிகுந்த அரசுத் துறைகளில், இதுவும் ஒன்று.சில அதிகாரிகளின் முறைகேடு, விதிமீறல், சட்டவிரோத செயல்களால், சில ஆண்டுகளாகவே இத்துறை, நீதிமன்றங்களின் கண்டனத்துக்கு அதிகம் உள்ளானது. பக்தர்களால், சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளானது.இறை பக்தியுடன், கட்டுப்பாடுடன் பணியாற்ற வேண்டிய இத்துறையில், முறைகேடு, ஊழல் புகார்கள் மலிந்தது மட்டுமின்றி, தங்களின் விதிமீறல்களுக்கு இடையூறாக இருக்கும் அதிகாரிகளை, ஊழியர்களை வேறு இடங்களுக்கு பந்தாடி, பழிவாங்கும் போக்கும் அதிகரித்து வந்தது.

தங்களின் விதிமீறல்களுக்கு, அதுதொடர்பான உத்தரவுகளுக்கு பணிந்து போகக்கூடிய அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்கள் தொடர்பான கோரிக்கைகளை, பணிகளை ஏற்று, உத்தரவு வழங்குவர். பணிந்து போகாத அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழுள்ள கோவில்களின் கோரிக்கைகளை நிராகரிப்பது அல்லது ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, திருப்பி அனுப்புவர்.இதுபோன்ற செயல்களால், நேர்மையான அதிகாரிகள், ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால், அறநிலையத் துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டு வந்தது.இத்துறையின் நிர்வாகத்தில், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், முறைகேடு புகாரில் தண்டிக்கப்பட்டவர்கள், கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின், 'ஆட்டம்' நிறுத்தப்பட வேண்டும் என்றும் பக்தர்கள் தரப்பில் இருந்து, தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.


அரசு அதிரடிஇந்நிலையில், பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பரிந்துரையின்படி, அறநிலையத் துறைக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் கூடுதல் நிர்வாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டு, ரமண சரஸ்வதி நியமிக்கப்பட்டார். இவர், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை தலைமையகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை இஷ்டம் போல, 'ராஜ்யம்' செய்து வந்த, உயர் அலுவலர்களிடம் இருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, கூடுதல் நிர்வாக கமிஷனருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.


மகிழ்ச்சிஇது, கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, வரவேற்பையும் பெற்றுள்ளது.

பக்தர்கள் கூறியதாவது:தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும். இத்துறையில் களை எடுக்கப்பட வேண்டிய உயர் அலுவலர்கள் பலர் உள்ளனர். அறநிலையத் துறை மண்டலங்களில் பணியாற்றும் திறமை வாய்ந்த, நேர்மையான அலுவலர்கள், தலைமையகத்துக்கு மாற்றப்பட வேண்டும்.அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் சரிக்கட்டி, இத்துறையில் ஒரே இடத்தில், பல ஆண்டுகளாக கோலோச்சி, ஒட்டுமொத்த நிர்வாகமும் தமக்கு கீழேதான் என்ற அதீத அகங்காரத்துடன் செயல்படும் இரண்டாம் மட்ட அலுவலர், அதிகாரத்தில் இருந்தே அகற்றப்பட வேண்டும்.

ஹிந்துக்களின் நலனுக்காக, திராவிட கட்சிகளின் அரசுகள் எதுவும் செய்ததில்லை என்ற கருத்து பொதுவாக சொல்லப்படுவதுண்டு. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அறநிலையத் துறை, கோவில் நிர்வாகத்தை தமிழக அரசு சீரமைக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் மட்டுமே, ஹிந்துக்கள் மத்தியில் அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரை களைய முடியும்; ஹிந்துக்களின் நம்பிக்கையை, தேர்தல் காலங்களில் பெற முடியும்.இவ்வாறு, பக்தர்கள் தெரிவித்தனர்.


புதிய கூடுதல் கமிஷனருக்குஅதிகாரம் என்னென்ன?


மாநில அலுவலர்கள் பணித் தொகுதி; அமைச்சுப் பணியில் ஆய்வர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், அடிப்படை பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பது.பணி மாறுதல், நியமனம், ஒழுங்கு நடவடிக்கை, செயல் அலுவலர்கள் தொடர்பான நடவடிக்கைகள், புதிய பணியிடங்கள் ஏற்படுத்துவது, புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது, கோவில்கள் தொகுப்பு ஒருங்கிணைத்தல், மாற்றி அமைத்தல் தொடர்பான நடவடிக்கைகள். பொறியியல் பிரிவு பணித் தொகுதி, தணிக்கைப் பிரிவு, சட்டப்பிரிவு, கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள், முதுநிலை கோவில்கள் முழு நிர்வாகம், அறநிலையத் துறை இணையதளம் உள்ளிட்ட மேலும் பல பொறுப்புகள், அதிகாரிகள், புதிய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
09-ஜன-202111:37:00 IST Report Abuse
Swaminathan Chandramouli அதிகார வர்கம் கடைநிலை அலுவலர்கள் மூலமாக லஞ்சம் வாங்குகின்றனர் ஒரு பாண்டியன் வரலாறு காணாத அளவுக்கு லஞ்சம் வாங்கி பல கோடிக்கணக்கில் சொத்தாகவும் நகைகளாகவும், நிலமாகவும், பணமாகவும் சேர்த்து உள்ளார் இது நெடுங்காலமாக நடந்து வந்து உள்ளது இதுவரை யாரும் இதை பற்றி மூச்சு விடவில்லை இந்த பாண்டியன் மட்டும் அல்ல , இன்னும் சேர சோழர்களும் இந்த தர்ம காரியத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் கீழ் மட்டத்தில் இருந்து உச்சாணி கிளைகள் வரை பணம் பாய்ந்து உள்ளது யாரும் வாய் திறக்க மாட்டார்கள், திறந்தா பரலோகம்தான் முக்கியமாக கடந்தப்பத்து ஆண்டுகளாக இவை நடந்து வருகின்றன அதிகாரிகள் ,அரசியல் வியாதிகள் ஆளும் கட்சியில் உள்ளோர் எதிர் கட்சி மாமன்கள் , உறவுகள் எல்லோரும் இதில் அடக்கம்
Rate this:
Cancel
08-ஜன-202120:37:18 IST Report Abuse
K R PREM KUMAR From: "K R PREM KUMAR"Sent: Fri, 8 Jan 2021 18:08:27 GMT 0530To: "mkstalinoffice", "dmkparty", "headquarters", "info", "aiadmkprs", "dmrcni", "dmrcbe", "editordinamani"Subject: தமிழகத்தில் போராட்டத்தால் லஞ்சம் ஒழியாது.அன்புள்ள தி.மு.க. தலைவர் அவர்களுக்கு,வணக்கம். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் "லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்" என்ற அறிவிப்பை நேற்று  பார்த்தேன். அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதை போன்ற அறிவிப்புகளை பார்த்திருக்கிறேன். "பிறர் அறியும் வகையில்"  லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்பது தான் சரியான அறிவிப்பாக இருக்க வேண்டும் என்ற  வகையில தான் அரசு அலுவலகங்களில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதால், இந்த அறிவிப்பும் ஒரு சம்பிரதாயத்திற்காக தான் வைக்கபட்டுள்ளன என்பதை அனைவரும் அறிவோம்.அரசு காரியங்கள் தங்களது எண்ண்படி நிறைவேற்றி கொள்ள நிணைக்கும் பொதுமக்கள், உத்தரவளிக்கும் அளவு அதிகாரம் படைத்த அரசு உயர் அதிகாரிகளுக்கு ,லஞ்ச பண பரிமாற்றத்தை அவர்களுக்கு  கீழ் வேலை செய்யும் கீழ்மட்ட ஊழியர்களின் வழியாக மட்டுமே மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை அரசு அலுவலகங்களில் லஞ்ச பண பரிமாற்ற செய்திகளை பற்றி அனுதினமும் லஞ்ச குற்ற செய்திகள் மூலம் அறிய முடிகிறது. எனவே,  லஞ்சம் ஒழிய வேண்டும் என ஸ்டாலின் போன்ற எதிர்கட்சி தலைவர்கள்  எண்ணினால், லஞ்ச ஊழல் புகார்களை அமைச்சர்களுக்கு எதிராக  தேடுவதற்கு பதிலாக, சமுதாய விரோத செயலாக கருதபடும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் ஊழியர்களை அடையாளம் கண்டு, துணிச்சலோடு அவர்களது பெயர்களையும், வகிக்கும் பொறுப்பு மற்றும் அவர்களது  நடவடிக்கைகளை முழு ஆதாரங்களுடன் பகிரங்கமாக வெளியிட முன்வர வேண்டும்.  இவை தான் அவர்களை பொறுப்பிலிருந்து அகற்ற பேருதவியாக இருக்கும். இதனால் அவர்கள் மக்களின் பாராட்டுகளை பெறுவதுடன் அரசு அலுவலகங்களில் ஊழலை ஒழிக்க பாடுபடுகிறார்கள் என்ற நற்பெயரும் அவர்களுக்கு  கிடைக்கும்.K.R.Prem KumarMobile: 9916324284நகல்.: மாண்புமிகு தமிழக முதல்வர் 
Rate this:
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
08-ஜன-202117:41:26 IST Report Abuse
krishnamurthy யாருடைய தலையெட்டும் இல்லாதிருந்தால் துறையை சீரமைக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X