பொது செய்தி

தமிழ்நாடு

முன்கூட்டியே வசதிகள் 'சிப்காட்' புதிய திட்டம்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
சென்னை:தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு, தேவையான வசதிகளை முன்கூட்டியே வழங்கும், 'பிளக் அண்டு பிளே' என்ற திட்டத்தை, 'சிப்காட்' துவங்குகிறது. தமிழக அரசின், 'சிப்காட்' எனும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்திடம் பெறும் நிலத்தில், பெரு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்குகின்றன. அடிப்படை வசதிஇதற்காக, காஞ்சிபுரம், துாத்துக்குடி, நிலக்கோட்டை உட்பட, பல்வேறு

சென்னை:தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு, தேவையான வசதிகளை முன்கூட்டியே வழங்கும், 'பிளக் அண்டு பிளே' என்ற திட்டத்தை, 'சிப்காட்' துவங்குகிறது.

தமிழக அரசின், 'சிப்காட்' எனும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்திடம் பெறும் நிலத்தில், பெரு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்குகின்றன. அடிப்படை வசதிஇதற்காக, காஞ்சிபுரம், துாத்துக்குடி, நிலக்கோட்டை உட்பட, பல்வேறு மாவட்டங்களில், 21 தொழில் பூங்காக்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், புதிதாக தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு, உற்பத்தியை துவக்க வசதியாக, அனைத்து வசதிகளையும் முன்னரே செய்து தரும் திட்டம் துவங்கப்பட உள்ளது.

இது குறித்து, சிப்காட் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், தொழில் துவங்க வரும் நிறுவனங்களுக்கு, சிப்காட் தொழில் பூங்காக்களில், நிலம் மட்டுமே வழங்கப்படும். மேலும், சாலை, தண்ணீர், தெரு விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் மட்டும் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான கட்டடம் உட்பட, இதர அனைத்து வசிதகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், தற்போது, பிளக் அண்டு பிளே என்ற புதிய வசதி துவங்கப்பட உள்ளது.

இதற்காக, செய்யாறு, பெருந்துறை, ராணிப்பேட்டை மற்றும் ஒரகடம் - -2 ஆகிய பூங்காக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.எடை மேடைஇந்த திட்டத்தில், தொழிற்சாலை, அலுவலக கட்டடம், தொலை தொடர்பு வசதிகள், கனரக லிப்ட், எடை மேடை உட்பட, பல்வேறு வசதி கள் செய்து தரப்படும். நிறுவனங்கள் கோரும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X