பொது செய்தி

தமிழ்நாடு

வட கிழக்கு பருவ மழை இறுதி கட்டம்: 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 07, 2021
Share
Advertisement
சென்னை : வட கிழக்கு பருவ மழை, இறுதி கட்டத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, மாநிலம் முழுதும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்; இன்று, 14 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை அக்டோபரில் துவங்கி, அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்துள்ளது. இறுதி கட்டம்இன்னும்
வட கிழக்கு பருவ மழை, இறுதி கட்டம், மாவட்டங்கள், கனமழை, வாய்ப்பு

சென்னை : வட கிழக்கு பருவ மழை, இறுதி கட்டத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, மாநிலம் முழுதும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்; இன்று, 14 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை அக்டோபரில் துவங்கி, அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்துள்ளது.


ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இறுதி கட்டம்



இன்னும் ஒரு வாரத்தில் பருவ மழை முடிவுக்கு வரும் நிலையில், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலுார், நாகை உள்ளிட்ட வடக்கு, வட கிழக்கு கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக கன மழை கொட்டியது.

சென்னையில் ஒரே வாரத்தில், இரண்டு முறை மழை தீவிரம் அடைந்து, கன மழை பெய்தது. வரும், 11ம் தேதி வரை, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், பருவ மழை பரவலாக பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வளிமண்டல சுழற்சி


மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு:வங்கக் கடலை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், இன்று ராமநாதபுரம், துாத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நீலகிரி, கோவை ஆகிய, 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்.

நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, கடலுார், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில், கன மழை பெய்யும். நாளை மறுநாள், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும்.

வரும், 11ம் தேதி, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய உள் மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்

கூறினார்.


21 செ.மீ., கொட்டியது



நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், கடலுார், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில், மிக கன மழை பெய்துள்ளது.மேல்மாத்துார், நத்தம், 21; ரிஷிவந்தியம், 19; வேப்பூர், 18; சங்கராபுரம், 15; பீளமேடு, குடவாசல், 11; பூந்தமல்லி, 10; அரூர், அகரம் சீகூர், ஜெயங்கொண்டம், ராஜபாளையம், ஆண்டிப்பட்டி, 9; திருவிடைமருதுார், தம்மம்பட்டி, விழுப்புரம், 8; பூண்டி, அரவக்குறிச்சி, 7 செ.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X