ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக 1.30 லட்சம் எக்டேர் பரப்பளவில் ஆண்டுதோறும் நெல்சாகுபடி நடக்கிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி அக்டோபருக்கு முன்பே வயலை தயார் செய்து நெல் விதைக்கின்றனர். 2020 அக்டோபரில் போதிய மழையில்லை. வெறும் 97 மி.மீ., மழை மட்டுமே பதிவானதால் நெல்விதைகள் முளைக்கவில்லை.
இதையடுத்து விவசாயிகள் நிலத்தை மறுஉழவு செய்து மீண்டும் நெல் விதைத்தனர். நிவர், புரெவி புயல் காரணமாக நவ., டிசம்பரில் நல்ல மழைபெய்தது. ஆண்டின் சராசரி மழை அளவான 827 மி.மீ.,யை விட அதிகமாக மொத்தம் 845 மி.மீ.., மழை பெய்துள்ளது.மாவட்டத்தில் தற்போது 1.28 லட்சம் எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. இம்மாத இறுதி அல்லது பிப்ரவரியில் அறுவடைப்பணிகள் துவங்க உள்ளது.
கடந்தாண்டு நல்ல விளைச்சல் இருந்தபோதும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் நெல் விவசாயிகள் பாதிப்பு அடைந்தனர். இதனால் இவ்வாண்டு நெல் சாகுபடி விவசாயிகளின் இழப்பை தவிர்க்க ராமநாதபுரம், கடலாடி, சிக்கல், சாயல்குடி உட்பட மாவட்டம் முழுவதும் 22 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.இதன் மூலம் அரசு நிர்ணயித்த விலையில் விவசாயிகள் நெல் விற்று பயன் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் கூறினர்.-------------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE