ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் நடத்த பள்ளிகள் திறக்கலாம் என பெரும்பாலான பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பு விதிமுறை பின்பற்றி பொங்கல்பண்டிகைக்குபின் 10, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதையொட்டி நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 82 உயர்நிலை, 165 மேல்நிலைப்பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, அழகன்குளம், பெருங்குளம் பகுதி பள்ளிகளில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தை ஆய்வு செய்தார்.
பெரும்பாலான பெற்றோர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி 10, பிளஸ் 2 வகுப்புகளை தொடங்கலாம் என கருத்து தெரிவித்துள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் கூறினர்.
* கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகீம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டிஸ் முன்னிலை வகித்தார்.பொங்கல் பண்டிகைக்கு பிறகு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் திறக்கலாம் என பெருவாரியான பெற்றோர் தங்களது கருத்துக்களாக பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE