பொது செய்தி

தமிழ்நாடு

பிராமணர்களுக்கு தனி வாரியம் வேண்டும்!

Added : ஜன 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'தனி வாரியம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பதிவு பெற்ற பிராமணர் சங்க மாநில பொதுக் குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பதிவு பெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின், 11ம் ஆண்டு மாநில பொதுக் குழு கூட்டம், ஈரோடு, கருங்கல்பாளையத்தில், சமீபத்தில் நடந்தது. மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.ஈரோடு மாவட்ட தலைவர் வேதமூர்த்தி ராவ்

சென்னை:'தனி வாரியம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பதிவு பெற்ற பிராமணர் சங்க மாநில பொதுக் குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பதிவு பெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின், 11ம் ஆண்டு மாநில பொதுக் குழு கூட்டம், ஈரோடு, கருங்கல்பாளையத்தில், சமீபத்தில் நடந்தது. மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.ஈரோடு மாவட்ட தலைவர் வேதமூர்த்தி ராவ் வரவேற்றார்.

தீர்மானங்கள் விபரம்:

* மத்திய அரசு அறிவித்துள்ள முற்படுத்தப்பட்டுள்ள வகுப்பில், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்களுக்கு, 10 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு திட்டத்தை, தமிழக அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும்

* அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தக்கார் நியமனத்தில், பிராமணர் சமூகத்தில் உள்ள தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்

* ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் உள்ளது போல, பொருளாதார ரீதியாக நலிந்த, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பிராமண சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்கு என, தனி வாரியம் அமைக்க வேண்டும்

* 'டிவி' - பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில், பிராமணர் சமுதாயத்தை கொச்சைப் படுத்தி, அவர்களது இன உணர்வை புண்படுத்துவது போன்ற செய்தி வெளியிடுபவர்கள் மீது, சட்டப்பூர்வநடவடிக்கை எடுக்க வேண்டும்

* ராமேஸ்வரம்- தனுஷ்கோடி கடற்கரையில், வரும் தை அமாவாசை நாளில் புனித நீராடி, மூதாதையருக்கு நேர்த்திக் கடன், திதி சடங்குகளை செய்ய, அனுமதிக்க வேண்டும்

* சட்டசபை தேர்தலில், பிராமணர் சமூகத்திற்கு ஆதரவாக, பிரதிநிதித்துவம் அளிக்கும் அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்க, சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தக்க நேரத்தில் ஆதரவு அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-ஜன-202107:50:11 IST Report Abuse
Bhaskaran முதலில் ஒற்றுமையுடன் இருக்க முயற்சிக்க வேண்டும் .சமஷ்டி உபநயனங்கள் நடத்துவதைபோல் சமஷ்டி திருமணங்கள் செய்தால் செலவுகள் குறையும் .ஒரேநாள் திருமணத்தை நடத்தி வீண் செலவுகளை குறைக்கநும் பெருநகரங்களில் அபர காரியங்களுக்கு சாஸ்திரிகள் யதாசக்தி படி பணம் வாங்கினால் நன்றாக இருக்கும் என் நெருங்கிய உறவினர் மிகவும் ஏழை அவர் சமீபத்தில் காலமானார் ஒரு லட்சம் ரூபாய் வரை பிடுங்கிவிட்டனர் .யாரையும் குறை சொல்லவில்லை எத்தனைபேர் செலவு செய்யமுடியும் .மயிலை ராகவேந்திரமடத்தில் குறைந்த கட்டணத்தில் சிரார்த்தம் செய்யலாம் .இதென்னங்கநல்லூர் மடத்தில் அதிக செலவாகிறதாம் .சமூக பெரியவர்கள் இதெற்கெல்லாம் ஒரு தேர்வு கண்டால் நன்றாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X