ராமநாதபுரம் : பா.ஜ., மாநில தலைவர்முருகன் இன்றும், நாளையும் ராமநாதபுரம்மாவட்டத்தில் நடைபெறும் நம்ம ஊரு பொங்கல் விழாக்களில் பங்கேற்கிறார். இதற்காக இன்று(ஜன.8) காலை அவர் ராமநாதபுரம் வருகிறார்.
பா.ஜ., சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 'நம்ம ஊரு பொங்கல்' விழா நடத்தப்படுகிறது. நாளை(ஜன.9) காலை 9:30 மணிக்கு போகலுார் ஓட்டமட காளியம்மன் கோயில் முன்பு நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாநில தலைவர் முருகன் பங்கேற்கிறார்.மாவட்ட எல்லையான பார்த்திபனுாரில் இன்று காலை 11:00 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின் பரமக்குடி, போகலுார், அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் அரண்மனை, வாலாந்தரவை, ரெகுநாதபுரம் என பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு ரெகுநாதபுரத்தில் தங்குகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE