பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளுக்கு கரும்பு குறைவாக வழங்கல்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு வழங்க மொத்த அரிசி கார்டுகளை காட்டிலும் கரும்பு குறைவாக வழங்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு பதிலளிக்க முடியாமல் விற்பனையாளர்கள் சிரமப்படுகின்றனர்.மாவட்டத்தில் 775 ரேஷன் கடைகளில் மொத்தம் 3,73,325 அரிசி கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2500 ரொக்கத்தொகை, பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், 5 அடி நீள கரும்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு வழங்க மொத்த அரிசி கார்டுகளை காட்டிலும் கரும்பு குறைவாக வழங்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு பதிலளிக்க முடியாமல் விற்பனையாளர்கள் சிரமப்படுகின்றனர்.

மாவட்டத்தில் 775 ரேஷன் கடைகளில் மொத்தம் 3,73,325 அரிசி கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2500 ரொக்கத்தொகை, பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், 5 அடி நீள கரும்பு வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.93.33கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தினமும் 200 கார்டுதார்கள் வீதம் ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் 100 கார்டுகளுக்கு 90 கரும்புகள்வழங்குவதாக விற்பனையாளர்கள் புகார் கூறுகின்றனர். இதனால் விற்பனையாளர்களுடன் மக்கள் வாக்குவாதம் செய்கின்றனர்.

இவ்விஷயத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலையிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் நுாறு சதவீதம் கரும்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா கூறுகையில், 'அனைத்து ரேஷன் கடைகளிலும் தொய்வு இல்லாமல் பொங்கல் பரிசு கொடுக்கப்படுகிறது. தற்போது 90 சதவீதம் வரை கரும்பு கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கரும்பு கொள்முதல் செய்த லாரியில் வரவர கடைகளுக்குஅனுப்புகிறோம். கரும்பு பற்றாக்குறை குறித்து புகார் வரவில்லை, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X