கீழக்கரை : பா.ம.க., வன்னியர் சங்கமும் இணைந்து கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கீழக்கரை நகர் பா.ம.க., செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் ஜீவா முன்னிலை வகித்தார். நகர் தலைவர் அப்துல் லத்தீப், மீனவர் சங்க செயலாளர் முருகானந்தம், பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் திருஞானம், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஹக்கீம் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் அரசு மற்றும் கல்வி வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட வேண்டியும், ஜாதிவாரி கணக்கெடுப்புநடத்தி, மக்கள்தொகை சதவீதப்படி ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடந்தது. பின் நகராட்சி கமிஷனர் தனலெட்சுமியிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE