ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய்காப்பு உற்ஸவம் துவங்கியது.
இதை முன்னிட்டு நேற்று காலை 9:00மணிக்கு ஆண்டாள் தந்தபல்லக்கில் கோயிலிலிருந்து புறப்பட்டு மாடவீதிகள் வழியாக ராஜகோபுரம் முன் எழுந்தருளினார். அங்கு போர்வைபடி களைந்து திருவடி விளக்கம், அரையர்சேவை, தீர்த்தம், சடாரி, கோஷ்டி நடந்தது.பின் அங்கிருந்து ஆண்டாள் புறபட்டு ரதவீதிகள் வழியாக திருமுக்குளம் கரை எண்ணெய்காப்பு மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு மதியம் 1:00 மணிக்கு எண்ணெய்காப்பு உற்சவம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
இரவு 7:00மணிக்கு ல்ஆண்டாள், தங்க தோளுக்கினியாள் வாகனத்தில்புறப்பட்டு ரதவீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தடைந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழாவில் தினமும் ஆண்டாள் வெவ்வேறு அலங்காரத்தில்கோயிலிலிருந்து புறப்பட்டு எண்ணெய்காப்பு உற்ஸவத்தில் பங்கேற்கிறார். தை மாதபிறப்பான ஜன.14 அன்று மணவாளமாமுனிகள் மங்களாசாசனம், ஜன.15 அன்றுகனு வைபவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள் செய்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவத்தின் முதலாம் திருநாளில் ஆண்டாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE