கோர்ட் செய்தி

தமிழ்நாடு

முதியோருக்கு தபால் ஓட்டு ஆணையம் பதிலளிக்க உத்தரவு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
சென்னை:முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு, தபால் ஓட்டு அளிக்க அனுமதித்து, பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், தேர்தல் ஆணையம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில், 80 வயதை கடந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், தபால் ஓட்டு அளிக்க வழிவகை செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதில்,

சென்னை:முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு, தபால் ஓட்டு அளிக்க அனுமதித்து, பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், தேர்தல் ஆணையம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில், 80 வயதை கடந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், தபால் ஓட்டு அளிக்க வழிவகை செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதில், முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், ரகசிய தன்மை பாதுகாக்கப்படாது என்பதாலும், தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடுத்தார்.

தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து, 86 வயது முதியவர் துரை என்பவரும், மாற்றுத் திறனாளி சங்கம் சார்பிலும், வழக்கு தொடரப்பட்டன.இம்மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன.

தி.மு.க., தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், முதியவர் துரை சார்பில், மூத்த வழக்கறிஞர் விடுதலை, சங்கம் சார்பில், மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் ஆஜராயினர்.தேர்தல் ஆணையத்தின் கருத்தை கேட்காமல், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறிய முதல் பெஞ்ச், மனுக்களுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X