சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செம்மர கட்டை கடத்தல் சசிகலா உறவினர் கைது

Added : ஜன 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில், சசிகலாவின் உறவினர் பாஸ்கரை, ஆந்திரா போலீசார் கைது செய்தனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் உறவினர் பாஸ்கர்; சென்னை அண்ணா நகரில் வசிக்கிறார். இவரது மகளை தான், சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனுக்கு திருமணம் செய்துள்ளனர். செம்மரக்கட்டை கடத்தல் கும்பலின் தலைவனாக

சென்னை:செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில், சசிகலாவின் உறவினர் பாஸ்கரை, ஆந்திரா போலீசார் கைது செய்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் உறவினர் பாஸ்கர்; சென்னை அண்ணா நகரில் வசிக்கிறார். இவரது மகளை தான், சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனுக்கு திருமணம் செய்துள்ளனர். செம்மரக்கட்டை கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்ட பாஸ்கர் மீது, ஆந்திராவில், 28க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இது தொடர்பாக, பாஸ்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்துள்ளார். போலீசாரால், 'கட்ட பாஸ்கர்' என, அழைக்கப்படும் இவர், பர்னிச்சர் கடையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநில செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று சென்னை வந்தனர். செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு தொடர்பாக, பாஸ்கரை கைது செய்து, அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
08-ஜன-202109:13:16 IST Report Abuse
R.RAMACHANDRAN சசிகலா கூட்டமே குற்றங்கள் பல செய்து கணக்கில்லா சொத்துக்கள் சேர்க்கும் கூட்டம் என்பது இதிலிருந்து தெளிவு.இவர்களெல்லாம் இந்த நாட்டில் பாதுகாக்கப்படுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X