சென்னை:சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவிக்கும் சசிகலா, வரும், 27ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த, நான்கு ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 2017 பிப்ரவரியில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, மூவரும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக, வருமான வரித் துறை தாக்கல் செய்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி, தமிழ்செல்வி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.சிறையில் இருந்து, வரும், 27ம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளதால், அவரிடம் விளக்கம் பெற்று பதில் அளிக்க, அவகாசம் அளிக்கும்படி, அவரது வழக்கறிஞர் கோரினார். இதையடுத்து, விசாரணையை, பிப்., 4க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE