சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1 லட்சம் லஞ்சம் உதவி இயக்குனர் கைது

Added : ஜன 08, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:லஞ்சம் வாங்கிய, நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டார்.கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியைச் சேர்ந்த, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் நாட்ராயன். இவருக்கு திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே சொந்தமாக நிலம் இருந்தது. இதை, மனைகளாக பிரித்து, விற்பனை செய்ய முடிவெடுத்தார்.அதற்கு ஒப்புதல் பெறுவதற்காக, திண்டுக்கல் நகர ஊரமைப்பு அலுவலகத்தில்

திண்டுக்கல்:லஞ்சம் வாங்கிய, நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியைச் சேர்ந்த, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் நாட்ராயன். இவருக்கு திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே சொந்தமாக நிலம் இருந்தது. இதை, மனைகளாக பிரித்து, விற்பனை செய்ய முடிவெடுத்தார்.அதற்கு ஒப்புதல் பெறுவதற்காக, திண்டுக்கல் நகர ஊரமைப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

உதவி இயக்குனர் முத்துகிருஷ்ணன், 54, என்பவர், 2.50 லட்சம் லஞ்சமாக கேட்டு, 1 லட்சம் ரூபாய்க்கு இறங்கி வந்தார்.நாட்ராயன், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று பணத்தை முத்துகிருஷ்ணனிடம் நாட்ராயன் வழங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், முத்துகிருஷ்ணனை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் தங்கியிருந்த திண்டுக்கல் வீட்டில் சோதனை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X