பேரூர்:பழங்குடியின மக்களுக்கு, 112 பசுமை வீடுகள் கட்டும் பணிகள், துவங்கி நடந்து வருகிறது.மத்வராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது சீங்கப்பதி, சாடிவயல் பதி, பொட்டப்பதி, வெள்ளப்பதி, நல்லுார்வயல் பதி. இந்த பழங்குடியினர் கிராமத்தில் உள்ள வீடுகள், பல ஆண்டுகளை கடந்ததால், மேற்கூரைகள் சிதிலமடைந்து மிக மோசமானது. மழைக்காலங்களில் குடியிருக்க முடியாத நிலையில் தவித்து வந்தனர். 'புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்' என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அந்தகிராமங்களில், சுமார், ரூ. 3.75 கோடி மதிப்பீட்டில், 112 பசுமை வீடுகள் கட்டும் பணி துவங்கியுள்ளது.பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE