சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை

Added : ஜன 08, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:இலங்கையில் வாடிய ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் 22 பேரின் கதி என்னவென்று தெரியாமல் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.ராமேஸ்வரத்தில் இருந்து டிச.,14ல் மீன்பிடிக்க சென்றபோது 4 படகு, 29 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கொரோனா சோதனைக்காக இரணதீவு, காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமில் ஜன.,13 வரை தனிமையில் அடைத்தனர். இந்நிலையில் ஜன.,6ல் இலங்கை

ராமேஸ்வரம்:இலங்கையில் வாடிய ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் 22 பேரின் கதி என்னவென்று தெரியாமல் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து டிச.,14ல் மீன்பிடிக்க சென்றபோது 4 படகு, 29 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கொரோனா சோதனைக்காக இரணதீவு, காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமில் ஜன.,13 வரை தனிமையில் அடைத்தனர். இந்நிலையில் ஜன.,6ல் இலங்கை சென்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக மீனவர்கள் விடுதலை மற்றும் இருநாட்டு மீனவ பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து அந்நாட்டு அதிபருடன் பேசினார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று இரணதீவில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ராபர்ட் ஸ்டைனர், ஜெபர்சன், பெர்கின்ட், கிப்சன், ரெடிக், அசோக், அந்தோணி ஆகியோரை விடுதலை செய்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.இவர்கள் ஓரிரு நாளில் விமானம் அல்லது ரோந்து கப்பல் மூலம் தமிழகம் வருகிறார்கள். மீதமுள்ள 22 மீனவர்கள் விடுவிக்கப்படாமல் உள்ளதால் அவர்களின் கதி என்னவென்று தெரியாமல் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X