ராமநாதபுரம்:பரமக்குடி சென்குப்தா தெரு மருந்து விற்பனை பிரதிநிதி நந்தகுமாரிடம் திருமண பரிசு விழுந்து இருப்பதாக கூறிய கும்பல் ரூ.11 லட்சம் மோசடி செய்தது.இவர் 'ஷாப் க்ளூ' என்ற ஆன்-லைன் நிறுவனத்தில் அடிக்கடி பொருட்கள் வாங்கினார்.
ஆக.,6ல் திருமண நாள் பரிசு விழுந்துள்ளதாக அந்த நிறுவனத்தில் இருந்து கடிதம் வந்தது. பரிசு பெற ரூ.11 லட்சம் செலுத்தும்படி கூறினர்.ஊரடங்கால் வேலை இழந்த நிலையில் வருங்கால வைப்பு நிதியில் எடுத்த பணம் உள்பட ரூ.11 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்தினார். தொடர்ந்து பணம் கேட்டனர். இதுபற்றிய புகாரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE