திண்டுக்கல் : ரெட்டியார்சத்திரத்தில் இஸ்ரேல் நாட்டு வெள்ளரி, குடை மிளகாயை சோதனை முறையில் வளர்த்து தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்கின்றனர்.
ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் பாலி, நெட் ஹவுஸ், பசுமை குடில், நிலப்போர்வை அமைத்து இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் வெள்ளரி, குடை மிளகாய், கத்தரிக்காய், தக்காளி சாகுபடி செய்கின்றனர். ் இஸ்ரேலில் இருந்து கொண்டு வரப்பட்ட 7 ரக வெள்ளரி, 8 ரக குடை மிளகாயை, சோதனை முறையில் மழைநீர் மற்றும் பூச்சி புகா வலை கூடாரத்தில் நடவு செய்துள்ளனர்.
நிழல் வலை அமைத்து சாகுபடி செய்வதால் ஒரு ஏக்கருக்கு 100 டன் வெள்ளரி மற்றும் குடை மிளகாய் மகசூல் கிடைக்கும். இது சாதாரண முறையை விட 3 மடங்கு அதிகம். இஸ்ரேல் விதையில் மகசூல் அதிகம் கிடைத்தால் அதை விவசாயிகளுக்கு பரிந்துரைக்க உள்ளனர்.
திட்ட அலுவலர் சீனிவாசன் கூறுகையில், ''தமிழக மண் வளம், சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்நாட்டு வெள்ளரி, குடைமிளகாயை சாகுபடி செய்ய முடியுமா என சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மகசூல் அதிகம் கிடைத்தால் விவசாயிகளுக்கு பரிந்துரைப்போம்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE