நத்தம் : நத்தம் பகுதியில் ஆதரவற்ற மூதாட்டிக்கு இளைஞர்கள் அமைப்பு சார்பில் வீடு அமைத்து கொடுக்கப்பட்டது.
முகநுால் மூலம் இணைந்த இப்பகுதி இளைஞர்கள் பசியில்லா நத்தம் அமைப்பை உருவாக்கியுள்ளனர். பசியால் வாடும் ஆதரவற்றோருக்கு ஒரு நேர உணவு வழங்கி வருகின்றனர்.செட்டியார்குளம் பகுதியில் உணவு வழங்க சென்ற போது சிட்டம்மாள் 70, என்ற மூதாட்டி சிதிலமடைந்த குடிசை வீட்டில் ஆதரவின்றி இருந்ததை பார்த்தனர். அவரை பனி, மழை, வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் வீடு அமைத்து தர முடிவு செய்தனர்.
நன்கொடையாளர்கள் மூலம் திரட்டிய நிதியை கொண்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் வீடு அமைக்கப்பட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார் திறந்து வைத்தார்.துப்புரவு ஆய்வாளர் சடகோபி, உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர். பசியில்லா நத்தம் அமைப்பினர் மதுசூதனன், ஆரிப் இப்ராஹிம்,கண்மணி, தேவா ஏற்பாடு செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE