சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
கரூர்:கரூரில், கல்லுாரி மாணவியை காதலித்த வாலிபர், குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, மாணவியின் தந்தை, கைது செய்யப்பட்டார். அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, வாலிபரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கரூர், காமராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயராம் மகன் ஹரிஹரன், 22; சலுான் கடை நடத்தி வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த, 18 வயது கல்லுாரி மாணவியும் காதலித்து வந்தனர்.

கரூர்:கரூரில், கல்லுாரி மாணவியை காதலித்த வாலிபர், குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, மாணவியின் தந்தை, கைது செய்யப்பட்டார். அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, வாலிபரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கரூர், காமராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயராம் மகன் ஹரிஹரன், 22; சலுான் கடை நடத்தி வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த, 18 வயது கல்லுாரி மாணவியும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மாணவியின் வீட்டில் எதிர்ப்பு இருந்தது.


ஆத்திரம்



ஹரிஹரனிடம் சமரசம் பேச, மாணவியின் உறவினர்கள், நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு அழைத்துள்ளனர். ஹரிஹரனும் சென்றார்.மாணவியின் தந்தை வேலன், 40, பெரியப்பா சங்கர், 47, சித்தப்பா முத்து, 35, மாமன்கள் கார்த்திகேயன், 40, வெள்ளைச்சாமி ஆகியோர், ஹரிஹரனிடம் காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுத்துள்ளார்.

ஆத்திரமடைந்த சங்கர், ஹரிஹரனை கத்தியால் குத்தியுள்ளார். மற்றவர்கள், அடித்து உதைத்து உள்ளனர். பலத்த காயமடைந்த ஹரிஹரன், அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.சங்கர், கார்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகியோரை கைது செய்த போலீசார், நேற்று மாணவியின் தந்தை வேலனை கைது செய்தனர். முத்து என்பவரை தேடி வருகின்றனர்.


போராட்டம்

இந்நிலையில், 'கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி நேற்று காலை, 11:30 மணியளவில், ஹரிஹரனின் உறவினர்கள், கரூர் - திருச்சி சாலை, காந்தி கிராமத்தில் மறியலில் ஈடுபட்டனர்.'அனைவரும் கைது செய்யப்படுவர்' என, போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X