பழநி : பழநி பகுதியில் தடை செய்த பாலிதீன் பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் பழநி பாலாறு- - பொருந்தலாறு, குதிரையாறு, வரதமாநதி அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகம் உள்ளது. இங்கு வருவோர் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளை பயன்படுத்துகின்றனர். அவற்றை வயல்வெளி பகுதியில் வீசி எறிந்து செல்வதால் நீர் மற்றும் மண்வளம் பாதிக்கப்படுகிறது.
பழநியில் அடிவாரம், பஸ் ஸ்டாண்ட், கிரிவீதி போன்ற பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாலிதீன் பைகளில் பொருட்களை வைத்து விற்கின்றனர். இதேபோல கொடைக்கானல் ரோடு, ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, தொப்பம்பட்டி பகுதிகளில் பாலிதீன் பை, டீ கப்கள் உபயோகம் தாராளமாக உள்ளது.
பழநி நகரில் நிரம்பி வழியும் குப்பைத்தொட்டிகளில் பெரும்பாலும் பாலிதீன் பொருள்களே அதிகமாக உள்ளன. இவற்றை உண்ணும் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே பாலிதீன் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE