பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ மாணவிகளுக்குஆசிரியர்கள் நிதிஉதவி 

Added : ஜன 08, 2021
Share
Advertisement
வடமதுரை L வடமதுரை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்து மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ள இரு மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.இங்கு படித்த சிங்காரகோட்டை பி.உமாமகேஸ்வரி, வேலாயுதம்பாளையம் எஸ்.சவுந்தர்யா முறையே கரூர், மதுரை அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர். நேற்று பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் இரு மாணவிகளுக்கும்

வடமதுரை L வடமதுரை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்து மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ள இரு மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

இங்கு படித்த சிங்காரகோட்டை பி.உமாமகேஸ்வரி, வேலாயுதம்பாளையம் எஸ்.சவுந்தர்யா முறையே கரூர், மதுரை அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர். நேற்று பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் இரு மாணவிகளுக்கும் ஆசிரியர்கள், பணியாளர்கள் சார்பில் தலா ரூ.42,500 நிதி வழங்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் சாலமன் ஜேசுராஜ் பேசுகையில், ''மாணவிகள் மருத்துவ கல்லுாரியில் ஆங்கிலத்தில் பேச சிரமப்படக் கூடாது என்பதற்காக பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாட்டில் ஆங்கில பேச்சுப் பயிற்சி வழங்கப்படுகிறது' என்றார்.

பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பெருமாள், துணைத் தலைவர் கோவிந்தராஜ் பங்கேற்றனர்.நடுநிலைப் பள்ளியில் விழாமுன்னதாக உமா மகேஸ்வரி துவக்ககல்வி பயின்ற வி.சிங்காரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பிலும் பாராட்டு விழா நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன், வேடசந்துார் கல்வி மாவட்ட அலுவலர் விஜயேந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் செலின்மேரி, ஜெயராணி, பள்ளி தலைமையாசிரியர் கனகராஜ் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X