திண்டுக்கல் : 'பாதயாத்திரை வரும் வழித்தடங்களில் பக்தர்களின் உடல்வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்' என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
அவர் தெரிவித்தது: பழநி தைப்பூச விழா பக்தர்களுக்கு சுவரொட்டி, துண்டு பிரசுரம், ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோயில் உட்புறம், பிரகாரத்தில் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை சோடியம் ைஹபோகுளோரைட் கரைசல் தெளிக்க வேண்டும். பக்தர்கள் விட்டுச்செல்லும் முகக்கவசம், கையுறைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.
பூஜை, அபிேஷகம் நடக்கும் போது பக்தர்கள் உட்கார்ந்து பார்வையிட அனுமதிக்க கூடாது.பக்தர்களுக்கு குங்குமம், விபூதி, பிரசாதங்கள் வழங்குவதை அர்ச்சகர்கள் தவிர்க்க வேண்டும். பக்தர்கள் வரும் வழியில் மருத்துவக் குழுவினரை தயாராக வைத்திருக்க வேண்டும். தினமும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு மிகாமல் குழுவாக பிரித்து தரிசனத்திற்கு அனுமதிக்கலாம். பிரசாதங்களை பொட்டலங்களாக எடுத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேர் திருவிழாவில் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை.இந்நிகழ்வை தொலைக்காட்சி, ஆன்லைன் வாயிலாக பார்க்க வசதி செய்ய வேண்டும். மலைக்கோயில் மட்டுமின்றி பக்தர்கள் வரும் வழியில் உடல் வெப்பநிலை பரிசோதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வெப்பநிலை சோதனைக்கு பின் இடும்பன் குளம், சண்முக நதியில் பக்தர்களை குளிக்க அனுமதிக்கலாம் என, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE