சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணின் வயிற்றிலிருந்து 6 கிலோ நீர்கட்டி அகற்றம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
பெரியகுளம்:பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வீரலட்சுமி 43, சினைப்பையிலிருந்து 6 கிலோ நீர்கட்டி அகற்றப்பட்டது.தேனிமாவட்டம் பெரியகுளம் வடகரை பெருமாள் மனைவி வீரலட்சுமி. சில வாரங்களாக வயிறு வீங்கிய நிலையில் வலியால் அவதிப்பட்டு வந்தார். வயிற்றை ஸ்கேன் செய்ததில் கட்டி இருப்பது தெரிந்தது. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில்

பெரியகுளம்:பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வீரலட்சுமி 43, சினைப்பையிலிருந்து 6 கிலோ நீர்கட்டி அகற்றப்பட்டது.

தேனிமாவட்டம் பெரியகுளம் வடகரை பெருமாள் மனைவி வீரலட்சுமி. சில வாரங்களாக வயிறு வீங்கிய நிலையில் வலியால் அவதிப்பட்டு வந்தார். வயிற்றை ஸ்கேன் செய்ததில் கட்டி இருப்பது தெரிந்தது. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் குமார், மருத்துவ அலுவலர் ஆசியா மேற்பார்வையில் டாக்டர்கள் திலகவதி, பாபுவெங்கடேஷ், கணபதி, மயக்கவியல் டாக்டர் கதிரேஷ் மருத்துவக்குழுவினர் நேற்று வீரலட்சுமிக்கு ஆப்பரேஷன் செய்து அவரது கருப்பை அருகே சினைப்பையில் இருந்த 6 கிலோ நீர்கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை செய்தனர். வீரலட்சுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X