திருமங்கலம்:மதுரை மாவட்டம் திருமங்கலம் குதிரைசாரிகுளம் விஜயன் 27. இவர் மதுரையிலிருந்து பிராய்லர் கோழிகளை மினி வேனில் ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை கப்பலுார் ரிங்ரோட்டில் திருமங்கலத்திற்கு வந்தார்.
வேனில் கீழ உரப்பனுார் கவின் 27, உசிலம்பட்டி நக்கலபட்டி சிலம்பரசன் 26, வந்தனர். துாத்துக்குடியில் இருந்து பழநிக்கு நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரியை எட்டயபுரம் கீழநம்பியார்புரம் வெற்றிவேல் 24, ஓட்டி வந்தார்.ரிங் ரோட்டில் சொக்கநாதன்பட்டி விலக்கு அருகே டீ குடிக்க லாரியை ஓரமாக நிறுத்த முயன்ற போது, பிராய்லர் கோழி ஏற்றி வந்த வேன் மோதியது. கவின், சிலம்பரன் இடிபாடுகளில் சிக்கி பலியாயினர்.
அவர்களது உடல்களை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையில் வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டனர். காயமுற்ற வேன் டிரைவர் விஜயன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE