பொது செய்தி

தமிழ்நாடு

பண்டகசாலை அலுவலர்களுக்கு கொரோனா கால சிறப்பு டி.ஏ.,

Added : ஜன 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை:கொரோனா ஊரடங்கில் பணியாற்றிய தொடக்க கூட்டுறவு பண்டகசாலை அலுவலர்களுக்கு சிறப்பு போக்குவரத்து பயணப்படி வழங்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.மாநிலத்தில் 288 தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகளுக்கு உட்பட்ட 2 ஆயிரம் நியாய விலை கடைகள் மற்றும் 110 மண்ணெண்ணெய் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உள்ள விற்பனையாளர், கட்டுநர்கள் ஊரடங்கில் பணியாற்றினர். இதற்காக 2020 மே முதல் ஆக., வரை தினம்

மதுரை:கொரோனா ஊரடங்கில் பணியாற்றிய தொடக்க கூட்டுறவு பண்டகசாலை அலுவலர்களுக்கு சிறப்பு போக்குவரத்து பயணப்படி வழங்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 288 தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகளுக்கு உட்பட்ட 2 ஆயிரம் நியாய விலை கடைகள் மற்றும் 110 மண்ணெண்ணெய் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உள்ள விற்பனையாளர், கட்டுநர்கள் ஊரடங்கில் பணியாற்றினர். இதற்காக 2020 மே முதல் ஆக., வரை தினம் ரூ.200 வீதம் சிறப்பு டி.ஏ., வழங்கப்பட்டது.

இதுபோல் பண்டக சாலை மேலாளர்கள் மற்றும் எழுத்தர்களுக்கும் சிறப்பு டி.ஏ., வழங்க கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜூவிடம் தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கம் கோரிக்கை மனு அளித்தது. இதையடுத்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் கிரேஷ் பச்சான் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து கூட்டுறவு பண்டகசாலை ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் வெங்கடாசலபதி கூறுகையில் “எங்கள் சங்க கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த அமைச்சர், பதிவாளருக்கு நன்றி ” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
08-ஜன-202111:18:20 IST Report Abuse
Bhaskaran கொரோனா காலத்தில்வீதி வீதியாக வந்து அரசின் நிவாரணம் வழங்கினார்கள் .இவர்களுக்கு அரசு இன்னும் கூட கொடுக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X