மதுரை : மதுரை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன் வரவேற்றார். வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் வனிதா, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரேமலதா, அரசு சட்ட கல்லுாரி உதவி பேராசிரியர் சோனா, உளவியலாளர் அபர்ணா, கிரேஸ் கென்னட் தத்துவ மைய சமூக பணியாளர் பாண்டி பங்கேற்றனர். குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூக பணியாளர் அருள்குமார் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE