பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமி கண்ணில் குத்திய தூண்டில் முள்; டாக்டர்கள் அகற்றினர்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
மதுரை : சிவகங்கை மாவட்டம் கோமாளிப்பட்டியை சேர்ந்த 4 வயது சிறுமியின் இடது கண்ணில் மீன் பிடிக்கும் துாண்டில் முள் சிக்கியது. வலியால் துடித்த சிறுமியின் கண் பகுதி வீங்கியதுடன் பார்வை குறைவும் ஏற்பட்டது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு வரப்பட்டார். கண் சிறப்பு பிரிவு டாக்டர் விஜயசண்முகம் தலைமையிலான

மதுரை : சிவகங்கை மாவட்டம் கோமாளிப்பட்டியை சேர்ந்த 4 வயது சிறுமியின் இடது கண்ணில் மீன் பிடிக்கும் துாண்டில் முள் சிக்கியது. வலியால் துடித்த சிறுமியின் கண் பகுதி வீங்கியதுடன் பார்வை குறைவும் ஏற்பட்டது.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு வரப்பட்டார். கண் சிறப்பு பிரிவு டாக்டர் விஜயசண்முகம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சோதித்தபோது மிகவும் ஆபத்தான பகுதியில் துாண்டில் முள் சிக்கியது தெரிந்தது. மயக்கவியல் துறை டாக்டர் செல்வக்குமாரின் உதவியுடன் துாண்டில் முள்ளை லாவகமாக அகற்றினர். இதனால் பார்வை இழப்பு அபாயம் நீங்கியது. தற்போது சிறுமியின் காயம் குணமடைந்து வருகிறது. சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரை டீன் சங்குமணி பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X