கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் குழு: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
மதுரை:அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க தாக்கலான வழக்கில், 'குழுவில் மனுதாரரை சேர்க்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை அவனியாபுரம் முனியசாமி (வி.சி.க., மாவட்ட உதவி அமைப்பாளர்) தாக்கல் செய்த பொதுநல மனு:தைப்பொங்கலையொட்டி அவனியாபுரத்தில் பாரம்பரிய

மதுரை:அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க தாக்கலான வழக்கில், 'குழுவில் மனுதாரரை சேர்க்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை அவனியாபுரம் முனியசாமி (வி.சி.க., மாவட்ட உதவி அமைப்பாளர்) தாக்கல் செய்த பொதுநல மனு:தைப்பொங்கலையொட்டி அவனியாபுரத்தில் பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு சிறப்புச் சட்டம் கொண்டு வந்தது. ஆனால், ஜல்லிக்கட்டு விழா கிராமக்குழுவை அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் முறையாக அமைக்கவில்லை.த

மிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு இருப்பது சிறப்பம்சம். ஆனால் அடித்தட்டு மக்களை புறக்கணிக்கின்றனர். கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும். அனைத்து சமுதாயத்தினர் அடங்கிய மாவட்ட அளவிலான குழு அமைக்க 2020ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடப்பு ஆண்டு ஜன.,14 ல் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அறிவித்துள்ளது. இதில் சில அங்கீகாரமற்ற குழுவினர் விழா ஒருங்கிணைப்புக்குழுவில் உள்ளது சட்டவிரோதம்.இதை ஆட்சேபித்து கலெக்டருக்கு மனு அனுப்பினோம். சமாதானக் கூட்டத்தில் கருத்து தெரிவித்தேன். ஆனால் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக்குழுவை வரன்முறைப்படுத்த திடமான முடிவை அரசுத் தரப்பில் எடுக்கவில்லை.

அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக்குழுவை அமைக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு முனியசாமி குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு: சமாதான கூட்டத்தில் மனுதாரர் தனது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு விழா அமைதியாக நடக்க வேண்டும் என்பதே மனுதாரரின் விருப்பம். ஒருங்கிணைப்புக் குழுவில் மனுதாரர் பெயர் இடம்பெற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை பைசல் செய்கிறோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X