சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் போலி சி.எஸ்.ஆர்., துணை கமிஷனர் விசாரணை

Added : ஜன 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீசில் போலி சி.எஸ்.ஆர்., வழங்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து, துணை கமிஷனர் விசாரித்து வருகிறார்.ஈரோட்டை சேர்ந்தவர் நாகராஜன், 58. இவருக்கு சொந்தமான வீடு, திருப்பூர் காங்கயம் ரோடு கே.என்.பி., லே- அவுட்டில் உள்ளது. 2020 பிப்., 22ல், வீட்டு பத்திரங்களை, டூவீலரில் சென்றபோது தவற விட்டார். இது குறித்து, சென்ட்ரல் போலீசில் புகார் அளித்தார்.மார்ச், 2ல்

திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீசில் போலி சி.எஸ்.ஆர்., வழங்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து, துணை கமிஷனர் விசாரித்து வருகிறார்.

ஈரோட்டை சேர்ந்தவர் நாகராஜன், 58. இவருக்கு சொந்தமான வீடு, திருப்பூர் காங்கயம் ரோடு கே.என்.பி., லே- அவுட்டில் உள்ளது. 2020 பிப்., 22ல், வீட்டு பத்திரங்களை, டூவீலரில் சென்றபோது தவற விட்டார். இது குறித்து, சென்ட்ரல் போலீசில் புகார் அளித்தார்.மார்ச், 2ல் சி.எஸ்.ஆர்., மற்றும் என்.ஓ.சி.,யை போலீசார் வழங்கினர். அதன்பின், அசல் பத்திரம் வழங்க கேட்டு, இந்த ஆவணங்களை, திருப்பூர் பத்திரப்பதிவு ஜாயின்ட்-2 அலுவலகத்தில் நாகராஜன் விண்ணப்பித்தார்.

அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், போலீஸ் தரப்பில் வழங்கப்பட்ட இரு ஆவணங்களும் போலியானது என கண்டறியப்பட்டு, சென்ட்ரல் போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. சி.எஸ்.ஆரில் உள்ள நம்பர், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வேறு ஒரு வழக்கு தொடர்புடையது என்றும், ஸ்டேஷன் சார்பில் சி.எஸ்.ஆர்., வழங்கவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

எனவே, 2020 செப்., 24ல், ஜாயின்ட் -2 சார்பதிவாளர் முத்து கண்ணன் அளித்த புகாரின் பேரில், போலி ரசீது தொடர்பாக நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட்டார். நாகராஜன் தரப்பு வக்கீல் நடராஜன் கூறுகையில், ''வீட்டு பத்திரம் 'மிஸ்சிங்' குறித்து முறையாக சென்ட்ரல் போலீசில் விண்ணப்பித்தோம். சி.எஸ்.ஆர்., மற்றும் என்.ஓ.சி., வழங்கினர். தாங்கள் செய்த தவறில் இருந்து தப்பித்து கொள்ள, நாகராஜனை சிக்க வைத்து விட்டனர்,'' என்றார்.போலி சி.எஸ்.ஆர்., மற்றும் என்.ஓ.சி., குறித்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனிடம் கேட்டதற்கு, ''இப்புகார் தொடர்பாக துணை கமிஷனர் விசாரித்து வருகிறார். விசாரணை முடிவில், நடந்தது என்னவென்று தெரிய வரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X