சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ. 18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலர் கைது

Added : ஜன 08, 2021
Share
Advertisement
போத்தனுார்:கோவையில் புதிய கட்டடத்துக்கு வரி விதிக்க, 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, மாநகராட்சி வரி வசூலர் மற்றும் அவரது உதவியாளர் சிக்கினர்.சுந்தராபுரம் அருகேயுள்ள அருள் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். புதியதாக வீடு கட்டி, வரி விதிப்புக்கு விண்ணப்பித்தார். மாநகராட்சி வரி வசூலரான, போத்தனுார் திருமறைநகரை சேர்ந்த கவுஸ் மொய்தீன்,54, கட்டடத்தை பார்வையிட்ட பின்,

போத்தனுார்:கோவையில் புதிய கட்டடத்துக்கு வரி விதிக்க, 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, மாநகராட்சி வரி வசூலர் மற்றும் அவரது உதவியாளர் சிக்கினர்.

சுந்தராபுரம் அருகேயுள்ள அருள் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். புதியதாக வீடு கட்டி, வரி விதிப்புக்கு விண்ணப்பித்தார். மாநகராட்சி வரி வசூலரான, போத்தனுார் திருமறைநகரை சேர்ந்த கவுஸ் மொய்தீன்,54, கட்டடத்தை பார்வையிட்ட பின், 'கட்டடத்தில் விதிமீறல் உள்ளது; 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் மட்டுமே வரி விதிப்பு செய்ய முடியும்' என, கூறியுள்ளார்.

பின்னர் பேரம் பேசி, 18 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்ள கவுஸ் மொய்தீன் ஒப்புக்கொண்டு உள்ளார். இது குறித்து செந்தில்குமார் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.டி.எஸ்.பி.கணேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், சுந்தராபுரத்தில் ஒரு ஓட்டலின் முன் காத்திருந்தனர்.

அங்கு வந்த கவுஸ் மொய்தீன், செந்தில்குமாரிடமிருந்து, 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி, தன்னுடன் வந்தவரிடம் கொடுத்தார். போலீசார், அவரையும், உடன் வந்தவரையும் சுற்றி வளைத்து, கைது செய்தனர்.விசாரணையில், உடன் வந்தவர், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தனபாலன், 45 என்பதும், கவுஸ் மொய்தீன், லஞ்சமாக பெறும் தொகையை வசூலிக்க உதவிக்கு வைத்திருப்பதும் தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X