அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிரிகளை விரட்டியடிக்க பழனிசாமி வலியுறுத்தல்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
ஈரோடு:''சட்டசபை தேர்தலில், எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து, தமிழகத்தில் ஒரே கட்சிதான் இனி என்ற நிலையை ஏற்படுத்த, இளைஞர்கள், இளம்பெண்கள் பாடுபட வேண்டும்,'' என, முதல்வர் பழனிசாமிபேசினார்.இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் பேசியதாவது:தேர்தல் பிரசாரத்துக்காக பல்வேறு

ஈரோடு:''சட்டசபை தேர்தலில், எதிரிகளை ஓட ஓட விரட்டியடித்து, தமிழகத்தில் ஒரே கட்சிதான் இனி என்ற நிலையை ஏற்படுத்த, இளைஞர்கள், இளம்பெண்கள் பாடுபட வேண்டும்,'' என, முதல்வர் பழனிசாமிபேசினார்.

இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் பேசியதாவது:தேர்தல் பிரசாரத்துக்காக பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று வருகிறேன். இதில் இளைஞர் பட்டாளத்தினர் எழுச்சியுடன் உள்ளனர். ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம்.

தேர்தல் என்ற போர்க்களத்தில் சிப்பாயாக வெற்றி பெற பாடுபட்டு, எதிரிகளை ஓட ஓட, நீங்கள் விரட்ட வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், தமிழகத்தில் ஒரே கட்சி, அ.தி.மு.க., மட்டும் தான் என்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நாள் பிரசாரத்தை, ஈரோடு, பி.எஸ்., பார்க்கில் முதல்வர் பழனிசாமி துவங்கி பேசியதாவது:காவிரி ஆற்றில் மாசு நீர் கலப்பதால், காவிரி நீர் மாசு படுகிறது. இதை தடுத்து நிறுத்த, 'நடந்தாய் வாழி காவேரி திட்டம்' தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பினோம். பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டத்தில், பிரதமர் இத்திட்டத்தை அறிவித்தார். இதை ஜனாதிபதி பாராட்டி, விரைவில் செயல்படுத்த கேட்டுக் கொண்டார்.

இத்திட்டங்கள் மூலம் சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதுடன், காவிரி நீர் சுத்தமாகும். கடந்த மார்ச் முதல் தற்போது வரை, கொரோனா பேரிடர் காலமாக உள்ளது. இச்சூழலிலும், தமிழகத்திற்கு, 6,000 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடு வரப்பெற்றுள்ளது. இதன் மூலம், 1.25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X